» சினிமா » திரை விமர்சனம்

நண்பன்: பார்க்க வேண்டிய படம்!!

சனி 14, ஜனவரி 2012 5:33:15 PM (IST)


எதை செய்தாலும் அதை விருப்பப்பட்டு செய்தால் அந்த துறையில் நீ வெற்றியடையலாம் என்ற ஒரு வரிக் கதைதான் நண்பன். பாலிவுட்டில் வெற்றி பெற்ற த்ரீ இடியட்ஸ் படத்தை அப்படியே தமிழில் ரீமேக்கியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
 
என்ஜினியரிங் படிக்க வரும் மாணவர்களான விஜய் (பஞ்சவன் பாரிவேந்தன்), ஜீவா (சேவற்கொடி செந்தில்), ஸ்ரீகாந்த் (வெங்கட் ராமகிருஷ்ணன்) ஆகிய மூவரும் கிளாஸ்மேட்ஸ் மட்டுமின்றி ஹாஸ்டல் மேட்ஸ்களாகவும் வருகிறார்கள்.
 
அந்த என்ஜினியரிங் கல்லூரியை சத்யராஜ் (விருமாண்டி சந்தனம் என்கிற வைரஸ்) நடத்தி வருகிறார். மிகவும் கண்டீப்பான மனிதர். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வதில் வல்லவர். இவரது திறமையான வழிகாட்டுதலால் அந்த கல்லூரி இந்தியாவிலேயே 7 வது சிறந்த கல்லூரியாக முன்னேறி இருக்கிறது.
 
பணக்கார வீட்டு பையனாக விஜய், நடுத்தர குடும்பத்து பையனாக ஸ்ரீகாந்த், ஏழைக்குடும்பத்து பையனாக ஜீவா. இவர்களில் விஜய்க்கு என்ஜினீயரிங் என்றால் மிகவும் விருப்பம். ஸ்ரீகாந்த்திற்கோ வைல்ட் லைப் போட்டோ கிராபியில் விருப்பம், ஜீவாவிற்கு தன் குடும்ப கஷ்டத்திற்க்காகவும், தான் விருப்பமும் என்ஜினியரிங் என்பதாலும் அங்கே படிக்க வருகிறார்கள்.
 
எதையும் விட்டுக் கொடுக்காமல் ரூல்ஸ்படி சத்யராஜ் இருப்பதால் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொள்கிறார். அது தற்கொலையல்ல, சத்யராஜ் செய்த கொலை என்று அவரிடமே விஜய் வாதிடுகிறார். இதனால் விஜய் மேல் வெறுப்படைகிறார் சதயராஜ்.
 
இவர்களுக்கு போட்டியாளனாக வரும் சத்யன் (ஸ்ரீவத்சன் என்கிற சைலன்சர்) எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதில் கில்லாடி. இதை விஜய் நாசூக்காக தவறு என்று எடுத்து சொல்வதால் சத்யராஜின் வெறுப்பு இன்னும் அதிகமாகிறது.
 
இடையில் சத்யராஜின் திருமணத்திற்குள் நுழையும் விஜய் குழுவினர் அங்கும் கலாட்டவை ஏற்படுத்துகிறார். அங்கே கதாநாயகியான இலியானாவை (ரியா) சந்திப்பது மட்டுமின்றி அவரது வருங்கால கணவரையும் கலாட்டா செய்துவிடுகிறார்.
 
மேலும் சில சம்பவங்களால் வெறுப்பின் உச்சத்திற்கு செல்லும் சத்யராஜ் இந்த மூவரையும் கல்லூரியை விட்டே நீக்குகிறார். அப்போது சத்யராஜின் மூத்த மகளான அனுயாவிற்கு (ஸ்வேதா) பிரசவ வலி வந்து விட, தன் கண்டுபிடிப்புகளால் இக்காட்டான அச்சூழலில் தாயையும் சேயையும் காப்பாற்றுகிறார் விஜய்.
 
கல்லூரி முடிந்ததும் விஜய் காணாமல் போய் விடுகிறார். அவரை ஜீவாவும், ஸ்ரீகாந்தும் 10 வருடங்களாக தேடுகின்றனர். இறுதியில் விஜய் என்ன ஆனார்? மற்ற இருவரும் அவர்களது லட்சியத்தை அடைந்தார்களா? விஜயின் காதல் என்ன ஆனது ? என்பதை பலவித திருப்பங்களோடு சொல்லி சுபம் போட்டிருக்கிறார் சங்கர்.
 
படம் பிளாஷ்பேக்கில் ஆரம்பித்தாலும் படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கலகலப்புக்கு பஞ்சமில்லை. திரைக்கதையை நகர்த்திய விதமும் சரி, கதை வசனமும் சரி அத்தனையும் கிளாப் ரகம்.
 

விஜய் தனது என்ட்ரியிலேயே தனது சீனீயர் மாணவருக்கு ஷாக் ட்ரீமெண்ட் கொடுத்து தனது இருப்பை அழுத்தமாக பதிவு செய்கிறார். யதார்த்தமான, அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசத்துகிறார். எதையும் இயல்பாக எடுத்துக் கொண்டு எல்லாவற்றையும் சமாளிக்கும் திறன் வேண்டும் என்பதற்கு இவரது கேரக்டரை உதாரணமாக சொல்லலாம்.
 
ஸ்ரீகாந்தின் பிளாஷ் பேக்கில்தான் கதை நகர்கிறது. அவரது பாந்தமான நடிப்பும், அவருக்கு பிடித்த துறைக்காக அவரது அப்பாவிடம் பேசும் காட்சிகளும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. ஏழை வீட்டு பையனாக வரும்
ஜீவாவும் தன் பங்கிற்கு பட்டாசு கொளுத்துகிறார். குடித்து விட்டு சத்யராஜையே கலாய்க்கும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது.
 
சத்யராஜின் என்ட்ரியும் படு அமர்க்களம். சைக்கிளில் வந்து மாணவர்களுக்கு காக்கா முட்டை கதை சொல்வதிலிருந்து, படத்தில் இவர் தனி ஆவர்த்தனமே செய்திருக்கிறார். இறுதிக் காட்சியில் நெகிழ்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துவதில் சத்யராஜ் சத்யராஜ்தான் என்பதை நிரூபிக்கிறார்.
 
இல்லாத இடுப்பைக் காட்டியபடி வரும் இலியானா. படத்தில் ஆடிப் பாடுகிறார். அப்பா சத்யராஜிடம் தன் அண்ணனுக்காக வாதிடும் போதும், கிளைமேக்ஸ் காட்சியில் இவரது பதற்றமான நடிப்பும் பிரமாதம்.
 

படத்தின் காமெடிக்கு சத்யன் பக்கபலமாய் இருக்கிறார். அவரைப் போன்ற கேரக்டர்களை இன்னும் நாம் பார்த்துக் கொண்டேதான் இருக்கிறோம். எஸ்.ஜே. சூர்யா ஒரு காட்சியில் வந்தாலும் மனிதர் கலகலக்க வைத்து விட்டு போகிறார்.
 
மனோஜ் பரம்ஹம்சாவின் ஒளிப்பதிவு கண்ணிற்கு குளிர்ச்சி தருகிறது. ஹாரிஸின் பின்னணி இசை படத்தோடு இழைந்து கலந்திருக்கிறது. என் பிரெண்டை போல யாரு மச்சான் முணுமுணுக்கும் ரகமாக இருக்கிறது.
 
கதை வசனம் படத்தின் முதுகெலும்பு என்றே சொல்ல வேண்டும். வாழ்க்கையில் எந்த பக்கம் போறதுன்னு ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும். அப்போ எந்த பக்கம் போறதுன்னு யோசிப்பது ரொம்ப முக்கியம், உனக்கு பிடிச்ச துறையா இருந்தா அதுல நீ ஜெயிக்கலாம் போன்ற வசனங்கள் பூஸ்ட் ரகம். ஆல் ஈஸ் வெல் என்ற விஜயின் டயலாக், இனி அவர்களது ரசிகர்களிடம் பிரபலமாகிவிடும். 
 
பாலிவுட் வாடையே தெரியாமல், சண்டை காட்சியே இல்லாமல் படத்தை திறமையாக இயக்கிய ஷங்கருக்கு ஹேட்ஸ் ஆப். நண்பர்களோடு மட்டுமின்றி எல்லோருடனும் பார்க்க வேண்டிய படம்தான் இந்த நண்பன். 


மக்கள் கருத்து

sakthiவெள்ளி 20, ஏப்ரல் 2012 - 07:29:50 PM | Posted IP 117.2*****

விஜய் இஸ் கிரேட்

சதிஸ்குமார்செவ்வாய் 20, மார்ச் 2012 - 10:44:50 AM | Posted IP 115.2*****

நண்பன் ஒரு நண்பன்

jamalவியாழன் 9, பிப்ரவரி 2012 - 03:49:43 PM | Posted IP 220.2*****

3 idots படம் சூப்பர் படம் . அதயே அப்படியே எடுத்திரூக்காங்க .

RAmeshசெவ்வாய் 7, பிப்ரவரி 2012 - 01:47:12 PM | Posted IP 117.2*****

மொக்க முனு செந்தப்புல படம் ஓடுமா ! விஜய் entha

சுரேஷ் குமார்வியாழன் 2, பிப்ரவரி 2012 - 02:10:40 PM | Posted IP 122.1*****

சூப்பர்

SIVAதிங்கள் 30, ஜனவரி 2012 - 04:31:52 PM | Posted IP 117.2*****

mokkai padam ora.... dayalaku.....vesdu

saravananவியாழன் 19, ஜனவரி 2012 - 07:28:57 PM | Posted IP 122.1*****

நண்பன் சுப்பர்

rajeshவியாழன் 19, ஜனவரி 2012 - 06:47:28 PM | Posted IP 117.2*****

vijay ஒன் of தி king

நல்லவன்வியாழன் 19, ஜனவரி 2012 - 03:16:04 PM | Posted IP 27.25*****

3 IDIOTS யாரும் பார்க்கல போல .... அதுதான் விஜய் நடிசிருக்கான்னு சொல்றாங்க ..

senthilசெவ்வாய் 17, ஜனவரி 2012 - 04:07:33 PM | Posted IP 123.2*****

vijay has proved that he is a king of collections.

mariappanசெவ்வாய் 17, ஜனவரி 2012 - 11:03:12 AM | Posted IP 117.2*****

padam 500 naal odum endhiran vasoolayae break pannirum vijay jeeva srikanth shankar sathyaraj ku hats off

ரபிக்ஞாயிறு 15, ஜனவரி 2012 - 09:26:11 PM | Posted IP 78.10*****

நல்ல நண்பர்கள், என்ஜாய் வித் யுவர் பிரிஎண்ட்ஸ் டியர்

SYEDஞாயிறு 15, ஜனவரி 2012 - 03:49:44 PM | Posted IP 49.20*****

nanban jaijedaan

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory