» சினிமா » திரை விமர்சனம்
மங்காத்தா: செம தில்லான ஆட்டம்!
சனி 3, செப்டம்பர் 2011 12:28:15 PM (IST)
கிரிக்கெட் சூதாட்டத்திற்காக கொண்டு செல்லப்படும் ஐநூறு கோடி பணத்தை கடத்த முயற்சிக்கும் கும்பல், அதில் கடைசியாக வந்து சேர்ந்து கொ(ல்)ள்ளும் விநாயக்காக அஜித். அஜித் நாற்பது வயது நிரம்பிய சஸ்பெண்ட் ஆகியிருக்கும் போலீஸ் அதிகாரி.
அர்ஜுன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்பிரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்பிரகாஷின் மகளான த்ரிஷாவும், அஜித்தும் லவ்வர்ஸ். ஐபிஎல் போட்டி நடைபெறும் நேரத்தில் 500 கோடி ரூபாய் பணம் மொத்தமாக மும்பை வந்து பிரியப்போவதை அர்ஜுன் தெரிந்து கொண்டு, மும்பையில் தன் டீமுடன் களமிறங்கிறார்.ஜெயப்பிரகாஷிடம் வேலை செய்யும் அடிப்பொடி வைபவ் தன் நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பணத்தை பிரிக்க திட்டமிடுகிறான். சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரி அஜித்தும், த்ரிஷா மூலம் ஜெயப்பிரகாஷை நெருங்கி, அந்தப் பணத்தை நோட்டம் இடுகிறார். பணம் வந்து சேரும் நாளில் போலீஸ் கெடுபிடி அதிகம் ஆக, ஜெயப்பிரகாஷ் குரூப் அதிகம் உஷாராகிறது.
திருட ப்ளான் போட்ட 4 பேரும் அஜித்தும் ஒன்றாக கைகோர்த்து பணத்தை லவட்டுகிறார்கள். ஒரு பக்கம் அர்ஜுன் விரட்ட, மறுபக்கம் ஜெயப்பிரகாஷ் விரட்ட, அது போதாதென்று திருடிய 5 பேரும் மாற்றி மாற்றி அடித்துக்கொள்கின்றனர். இறுதியில் அந்தப் பணம் யாருக்குச் சேர்ந்தது... திட்டம் போட்ட அஜித்திற்கா, வில்லன் குரூப்பிற்கா, போலீஸிற்கா... அல்லது அம்போவா என்பது விறுவிறுக்க வைக்கும் இறுதிக்காட்சி.
கதையே இல்லாமல் படம் எடுக்கிறார்கள் என்று பலரும் சொன்னதாலோ என்னவோ வெங்கட் பிரபு இவ்வளவு சிக்கலான கதையை எடுத்துக்கொண்டு களம் இறங்கி இருக்கின்றார். அஜித், ஜெயப்பிரகாஷ், த்ரிஷா, அர்ஜுன் என நாலு பேருமே கதையின் முக்கிய பாத்திரங்களாக இருப்பதால் எல்லோரின் கேரக்டரையும் தெளிவாக சொல்ல வேண்டிய கட்டாயம்.
அப்படி எல்லோரையும் சொல்லி முடிக்கவே 45 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. இன்னும் எத்தனை புது கேரக்டர் வரபோகுதோ என்று பயப்படும் அளவிற்கு ஒவ்வொரு சீனிலும் ஒரு கேரக்டர் வந்துகொண்டே இருக்கிறது. அது செட்டில் ஆனவுடன் ஆரம்பிக்கிறது மங்காத்தா ஆட்டம். அதன் பிறகு செம விறுவிறுப்புதான்.. திரைக்கதைக்கு அதிகம் மெனக்கட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.
தமிழ் சினிமா ஹீரோக்கள் இதையெல்லாம் பண்ணக்கூடாது என இலக்கணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் அந்த இலக்கணங்களை கடைப்பிடிப்பது அவசியம். கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார் அஜித்.
தனது முக்கியமான 50வது படத்தில் பிற நடிகர்களுக்கு முக்கிய தோற்றங்கள் கொடுத்து, கதைக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருக்கும் அஜித்தின் பெருந்தன்மை பாராட்டுதலுக்குரியது. அதிலும் தனக்குண்டான மாஸ் ஓபனிங், ரசிகர்கள், இமேஜ் என எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரு பக்கா நெகடிவ் கதாபாத்திரத்தை செய்திருப்பது அஜித் மேல் உள்ள மரியாதையை ரசிகர்களுக்கு நிச்சயம் அதிகரிக்கும்.
அர்ஜுன் இப்போதும் தான் ஒரு ஆக்ஷன் கிங் என்று நிரூபித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதே வேகம். அஜித்திற்கு இணையாக கதையில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர். இருவரும் மோதும் காட்சி அமர்க்களம். வைபவ் உள்ளிட்ட நான்கு பேரில் வழக்கம்போல் பிரேம்ஜி, நம் கவனத்தை ஈர்க்கிறார். படத்தில் காமெடிக்கு இவர் மட்டுமே என்பதால் அடர்த்தியான திரைக்கதையில் பெரிய ரிலீஃபாக இவர் இருக்கிறார்.
வழக்கம் போல் ஜெயப்பிரகாஷ் தன்னுடைய பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் அருமையாக நடித்துள்ளார். எந்த பாத்திரத்திற்கும் பொருந்த கூடிய ஒரு நடிகர் நாசர் போல். த்ரிஷா நடிப்பதற்கு வழங்கப்பட்ட நேரம் கொஞ்சம் என்றாலும் அழகாக சொந்தக்குரலில் பேசி மனதில் அழகாய் நிலைத்திருக்கிறார். கூடவே அஞ்சலி அமைதியான முகம் ப்ளஸ் அமைதியான அழகு, ஆனால் காட்சிகளில் அவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக தெரியவில்லை. ஆனாலும் தோன்றும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.
மகாகவி பாரதியாரின் பேரனான நிரஞ்சன் பாரதி எழுதிய கண்ணாடி நீ... கண்ஜாடை நான்... பாடலுக்கு வைபவ்-அஞ்சலி ஜோடியும், அர்ஜுன்-ஆன்ட்ரியா ஜோடியும் ஆடிப் பாடுகிறார்கள். அழகாய் கண்ணில் நிறைகிறார்கள். பார் நடத்துனரின் தோழியாக வரும் லட்சுமிராய் விளையாடு மங்காத்தா பாடலுக்கு ஆட மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.
படத்தினை முக்கியமாக தூக்கிநிறுத்திய விஷயம் அஜித்-அர்ஜுன் கூட்டணி. இவர்கள் இருவரும் வரும் காட்சிகள் அத்தனையும் அப்லாசுகளை அள்ளிக்கொண்டது. அதுவும் அஜித் வாயா ஆக்ஷன் கிங்கு என்கிறதும் பதிலுக்கு வாயா தல என்கிறதும் அப்ளாஸ். தமிழ் சினிமாவில் இப்படியான ஆரோக்கியமான நிகழ்வுகள் நடக்குறது வரவேற்கத்தக்கது.
படத்தில் பஞ்ச் சீன்கள் என்றவுடன் ஒரு பஞ்ச் டயலாக் ஞாபகத்திற்கு வருகிறது, ஆனால் இது வழக்கமான தமிழ் சினிமா பஞ்ச் டயலாக் போல் இல்லை, லைட்டாக, இயல்பாக அஜித் பேசும் எவ்ளோ நாளுக்குதான் நான் நல்லவனாக நடிக்கிறது என்ற டயலாக்கிற்கு அதிர்கிறது தியேட்டர்.
படத்தில் அஜித் பைக் ஓட்டும் சீனில் யாரும் சீட்டில் உட்காரவில்லை. அஜித் தண்ணியடித்துக்கொண்டு கூட்டாளிகளை கொல்வதற்கு செஸ் போர்டில் ப்ளான் பண்ணும் காட்சி வெங்கட் பிரபுவின் ஸ்பெஷல் பஞ்ச்.
படத்தில் குறையென்று பார்த்தால்........ அதிக கேரக்டர்களும், ஆரம்பத்தில் அதை ஞாபகம் வைக்க ரசிகர்கள் அவஸ்தைப்படுவதும் முக்கியக் குறை. அடுத்து காமெடி என்ற பெயரில் அந்த நான்கு பேர் குறிப்பாக பிரேம் அஜித்துடன் அடிக்கும் லூட்டி; டயலாக்குகள் நிறைய நேரம் மொக்கையாகவே உள்ளது. இவ்வளவு தூரம் கதைக்கு மெனக்கெட்டவர்கள் லாஜிக்கும் கொஞ்சம் பார்த்திருக்கலாம்.
எவ்வளவு ப்ளாப் கொடுத்தாலும், அஜித் படத்திற்கு எப்படி இவ்வளவு ஓப்பனிங் கிடைக்கிறது? அதுவும் மன்றங்களை கலைத்து அறிவிப்பு கொடுத்தவருக்கு? அரசியல் ஆசை காட்டாதவருக்கு?
தமிழக மக்களுக்கு ஒரு நடிகரை பிடிக்க வேண்டுமென்றால், சினிமாவில் நன்றாக நடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நிஜ வாழ்வில், ஒரு நல்லவராக மனதில் பதிய வேண்டும். திறமையை காட்டுபவரை விட, நல்லவராக காட்டுபவரையே, உயரத்தில் வைப்பார்கள். எந்த திட்டமிடலும் இல்லாமல், அஜித்திற்கு அது அதுவாகவே நடக்கிறது.
இசை யுவன்சங்கர் ராஜா. வெங்கட் பிரபு-யுவன் கூட்டணி பற்றி சொல்லவே வேண்டாம். நான்காம் முறையாக ஆட்சியை பிடித்திருக்கிறது இந்த கூட்டணி. அம்பானி பரம்பர பாட்டுக்கு தியேட்டரே எழுந்து ஆடுகிறது ரீரிக்கார்டிங்கில் தூள் கிளப்பி இருக்கிறார் யுவன். குறிப்பாக எதிரிகள் மீது தீப்பிடித்து எரியும்போது அஜித் மேலிருந்து ஜம்ப் செய்யும் காட்சியில் வரும் வயலின் எக்ஸ்ட்ரார்டினரி.
கேமிரா மேன் சக்தி சரவணன் படத்தின் கதைக்கேற்ற டோனில் நன்றாக செய்திருக்கிறார். படத்தின் முக்கியபலம் எடிட்டிங் அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள் பிரவீன் மற்று ஸ்ரீகாந்த் இருவரும். மும்பை தாராவி பகுதியா இல்லை செட்டா என்று கண்டுபிடிக்க முடியவில்லை அதனால் ஆர்ட் டைரக்டரை பாராட்டுவதா வேண்டாமா என்று தெரியவில்லை.
பலவீனம் என்று பார்த்தால், பாடல்கள் நன்றாக இருந்தாலும் மெலடி பாடல்கள் படத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. பின்லேடா பாடலில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகள் நன்றாக இருந்தாலும் கொஞ்சம் ஹெவியாக இருக்கிறது. மற்றபடி மங்காத்தா கலக்கலான மேட்ச்தான்.
மக்கள் கருத்து
Greson Gomezவெள்ளி 21, அக்டோபர் 2011 - 05:19:38 PM | Posted IP 122.1*****
பில்ட் அப் பண்ணுறமோ பீலா விடுரமோ .........எது பண்ணலும் உந்த உலகம் நம்மள உத்து பார்க்கணும் ஓகே ........... பரவா இல்லை .........பார்க்கலாம் ஒன்சே
Greson Gomezவெள்ளி 21, அக்டோபர் 2011 - 05:15:32 PM | Posted IP 122.1*****
படம் பார்க்கலாம் அவுளவு தான் ஓகே
ajeethசெவ்வாய் 20, September 2011 - 08:10:37 PM | Posted IP 49.20*****
thala is the next super star
விருதுநகர்சனி 10, September 2011 - 09:57:53 PM | Posted IP 117.2*****
மொக்கை படத்துக்கு கூட இப்படித்தான் பில்டப் குடுத்து விமர்சனம் வருமோ???
என்ன கொடுமை சரவணன் சார் இது????
அட கடவுலேய் கடவுலேய்..!!
( எது எப்படியோ எனக்கு இந்த மாசத்தில் முதல் வெட்டி செலவு வகையில் 100 ரூபாய் மங்காத்த -க்கு குடுத்தாச்சு..!! )
மாயாவியாழன் 8, September 2011 - 04:03:00 PM | Posted IP 122.1*****
படம் ஆஸ்கர் அவார்ட் வாங்கும் தல தல தான்
manoதிங்கள் 5, September 2011 - 01:32:16 PM | Posted IP 125.2*****
ணோ one stand infront of thala
S.P.அஜித்ராஜாதிங்கள் 5, September 2011 - 12:21:59 PM | Posted IP 117.2*****
மிகப் பெரிய வெற்றி படம்... நன்றி தல வெற்றி தொடர வாழ்த்துக்கள்...
பேன்திங்கள் 5, September 2011 - 10:46:44 AM | Posted IP 122.1*****
துப்பாக்கி சண்டை ஓவரோ ஓவர் .
படம் பிக் மொக்கை
saroதிங்கள் 5, September 2011 - 10:45:30 AM | Posted IP 122.1*****
அர்ஜுனும் அஜித்தும் பிளான் பண்ணி கொள்ளை அடிப்பானுங்க , அப்பறம் ஏன்டா ரெண்டு பேருக்கும் பைட்டு .............. முடியலடா ! சாமி . என்னமோ சொல்ல வந்து எங்கேயோ போயிட்டு படம் . படம் உண்மையிலேயே மங்கத்தா தான் டா ............................
sirajஞாயிறு 4, September 2011 - 05:40:53 PM | Posted IP 49.20*****
எடுத்த 50 தாவது படமும் போச்சா !
syedஞாயிறு 4, September 2011 - 05:38:34 PM | Posted IP 49.20*****
மொக்கை படத்துக்கு இது ஒரு உதாரணம்
ராஜாஞாயிறு 4, September 2011 - 03:40:35 PM | Posted IP 117.2*****
படம் சூப்பரா இருக்கு தல சூப்பர் படம் இந்த வருடத்தின் பெரிய வெற்றி படம்
மேலும் தொடரும் செய்திகள்

ராட்டினம் : தூத்துக்குடி இமேஜை மாற்றிய படம்!!
சனி 19, மே 2012 10:44:56 AM (IST)

ஒரு கல் ஒரு கண்ணாடி - சம்மருக்கேத்த ஜில் ஜில் ஜிகர்தண்டா
சனி 21, ஏப்ரல் 2012 12:45:21 PM (IST)

கொலவெறி 3: மயக்கம் என்ன படத்தின் ரீமேக்?..!
வியாழன் 5, ஏப்ரல் 2012 11:35:12 AM (IST)

கழுகு - ரசிகர்கள் ஆதரவளித்தால் உயரப் பறக்கும்...!
செவ்வாய் 27, மார்ச் 2012 4:30:31 PM (IST)

அரவான் - அசத்துவான்..!
சனி 3, மார்ச் 2012 11:30:55 AM (IST)



RAJAவெள்ளி 9, டிசம்பர் 2011 - 10:49:43 AM | Posted IP 141.0*****