» செய்திகள் » விளையாட்டு

Share

இந்திய அணியின் தோல்விக்கு அனுபவம் இல்லாத பந்துவீச்சே காரணம்: கேப்டன் தோனி

வெள்ளி 23, ஜூலை 2010 8:57:32 AM (IST)

டெஸ்ட் அரங்கில் புதிய உலக சாதனை படைத்தார் இலங்கை சுழல் மன்னன் முத்தையா முரளிதரன். காலே டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்திய இவர் 800 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமை பெற்றார். இவரது அசத்தல் பந்துவீச்சு கைகொடுக்க, காலே டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்தது. பேட்டிங், பவுலிங்கில் அசத்திய இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற முன்னிலை பெற்றது.

""காலே டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு, அனுபவம் இல்லாத வேகப்பந்து வீச்சு தான் காரணம்,'' என தோனி தெரிவித்தார். இது குறித்து இந்திய அணி கேப்டன் தோனி கூறியது: காலே டெஸ்டில் இந்திய அணியின் பந்து வீச்சு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளது. ஜாகிர் கான், ஸ்ரீசாந்த் இடம் பெறாதது பின்னடைவாக அமைந்து விட்டது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வில்லை.
 
இஷாந்த் சர்மா, மிதுன் ஆகியோருக்குப் போதிய அனுபவம் இல்லை. இருப்பினும் அறிமுக வீரர் மிதுன் ஆறுதல் அளித்தார். சேவக், சச்சின் போட்டிங்கில் அசத்தினர். முதல் இன்னிங்சில் சிறப்பாக ஆடியிருந்தால், "பாலோ-ஆனிலிருந்து' தப்பித்திருக்கலாம். ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர்.
 
தவிர, முரளிதரன், மலிங்கா ஆகியோரின் பந்து வீச்சு, இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்து விட்டது. பேட்டிங் ஆர்டரில் முதல் 6 வீரர்கள் சரியாக விளையாடா விட்டால், ரன் குவிப்பது மிகவும் சிரமமாகி விடும். அடுத்த போட்டியில் தவறுகளை திருத்திக் கொண்டு சிறப்பாக செயல்படுவோம். இவ்வாறு தோனி கூறினார்.
 
நேற்றைய போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் 7 வது முறையாக இப்பெருமை பெற்றுள்ளது. தவிர, இந்தியாவுக்கு எதிராக இது 2 வது முறை. இதற்கு முன் கடந்த 2001 ம் ஆண்டு காலேவில் நடந்த போட்டியில், இலங்கை அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads