» செய்திகள் » விளையாட்டு

Share

உலக கோப்பையை ஸ்பெயின் அணி கைப்பற்றும்: அடித்து சொல்கிறது "ஆக்டோபஸ்'!

சனி 10, ஜூலை 2010 6:03:55 PM (IST)

உலக கோப்பையை ஸ்பெயின் அணி கைப்பற்றும் என "ஆக்டோபஸ்' அதிரடியாக கணித்துள்ளது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி வெற்றி பெறும் என ஆருடம் கூறியுள்ளது.

ஜெர்மனியின் ஓபர்ஹாசினில் கடல்வாழ் உயிரினங்களின் கண்காட்சியகம் உள்ளது. இங்குள்ள பால் என்ற "ஆக்டோபஸ்', தென் ஆப்ரிக்காவில் நடக்கும் உலககோப்பை கால்பந்து தொடரில், ஜெர்மனியின் வெற்றி, தோல்விகளை சரியாக கணித்து வந்தது. அரையிறுதியில் ஸ்பெயினிடம், ஜெர்மனி தோல்வி அடையும் என சுட்டிக் காட்டியது. இதன்படியே ஜெர்மனி தோற்றது.
 
இதுவரை 6 போட்டிகளுக்கான முடிவை முன்கூட்டியே தெரிவித்த "ஆக்டோபசின்' கணிப்பு 100 சதவீதம் உண்மையாகி உள்ளது. இதனால் இன்று நடக்க உள்ள உள்ள மூன்றாவது இடத்துக்கான போட்டி மற்றும் நாளை நடக்க உள்ள பைனல் போட்டிகளில் எந்த அணிக்கு ஆக்டோபஸ் ஆதரவு தெரிவிக்கும் என ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
ஸ்பெயின் சாம்பியன்?:

இதனையடுத்து நேற்று பைனல் போட்டியில் விளையாட உள்ள ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து நாட்டு கொடிகள் அடங்கிய கண்ணாடி பெட்டிகள் வைக்கப்பட்டன. இதில், ஸ்பெயின் கொடி வரையப்பட்ட பெட்டியில் உள்ள சிப்பியை எடுத்தது ஆக்டோபஸ். இன்று நடக்க உள்ள மூன்றாவது இடத்துக்கான போட்டியில், ஜெர்மனி கொடி வரையப்பட்ட பெட்டியில் இருந்த சிப்பியை எடுத்து, அந்நாட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளது ஆக்டோபஸ்.
கிளி என்ன சொல்லுது?

ஆக்டோபசைப் போல சிங்கப்பூரில் உள்ள மணி என்ற கிளியும், உலககோப்பை போட்டிகளின் முடிவை முன்கூட்டியே கணித்து வருகிறதாம். உலககோப்பை தொடரின் 4 காலிறுதிப் போட்டி மற்றும் ஸ்பெயின், ஜெர்மனி அணிகள் மோதிய அரையிறுதிப் போட்டிகளின் முடிவை இந்தக் கிளி சரியாக கணித்துள்ளது. பைனலில் நெதர்லாந்துக்கு வெற்றி கிடைக்கும் என இந்தக் கிளி கணித்துள்ளது.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads