» செய்திகள் » விளையாட்டு
Share
இந்தமுறை கால்பந்து கோப்பையை நெதர்லாந்தே வெல்லும்-சிங்கப்பூர் கிளி சொல்கிறது
வெள்ளி 9, ஜூலை 2010 11:48:10 AM (IST)
தென் ஆப்பிரிக்க உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தே வெல்லும் என சிங்கப்பூரைச் சேர்ந்த முனியப்பன் என்பவரின் கிளி மணி ஆரூடம் கூறியுள்ளது.
ஜெர்மனியைச் சேர்ந்த பால் என்ற ஆக்டோபஸ், ஜெர்மனி தோற்கும், ஸ்பெயின் வெல்லும் என ஆரூடம் கூறி, அது பலித்து பெரும் பிரபலமாகி விட்டது. சிங்கப்பூரில் ஒரு கிளி ஜோசியர், இறுதிப் போட்டியில் நெதர்லாந்தே வெல்லும் என தனது கிளி மூலம் ஆரூடம் கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் வசித்து வரும் தமிழர் முனியப்பன். இவர் ஒருகிளி ஜோசியர். இவருடைய கிளி மணி. இது கடந்த 7 வருடங்களாக பல்வேறு ஆரூடங்களை சரியாக கூறி வருகிறதாம். தற்போது உலகக் கோப்பை சீசன் என்பதால், இறுதிப் போட்டியில் யார் வென்று கோப்பையை தட்டிச்செல்வார்கள் என்பதை தனது கிளி மூலம் ஆரூடம் கூறியுள்ளார் முனியப்பன். அதன்படி இறுதிப் போட்டியில் நுழைந்துள்ள நெதர்லாந்து, ஸ்பெயின் நாடுகளின் கொடி பதிக்கப்பட்ட சீட்டுக்களை கிளியிடம் கொடுத்தார்.
அப்போது மணி, நெதர்லாந்து கொடி பதித்த அட்டையை எடுத்துக் கொடுத்து கீ கீ என்று கத்தியது. இதையடுத்து நெதர்லாந்துதான் வெல்லும் என கிளி கூறுவதாக தெரிவித்தார் முனியப்பன். தனது கிளி இதுவரை தவறாக கணித்ததில்லை என்று கூறும் முனியப்பன், இந்த முறையும் நெதர்லாந்து வெல்லும் என்று கூறிய அதன் கணிப்பு பலிக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார்.

மேலும் தொடரும் செய்திகள்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: முதல் இடத்தை இழந்தார் தோனி!
திங்கள் 30, ஆகஸ்ட் 2010 10:57:41 AM (IST)

முத்தரப்பு கிரிக்கெட் இறுதிப்போட்டியில் தோல்வி: பேட்ஸ்மேன்கள் மீது டோனி பாய்ச்சல்
ஞாயிறு 29, ஆகஸ்ட் 2010 12:24:09 PM (IST)

சேவாக் அதிரடி சதம்: இந்தியா அபார வெற்றி
புதன் 25, ஆகஸ்ட் 2010 10:45:02 PM (IST)

இந்திய அணியின் தோல்வி: தோனி விளக்கம்!
திங்கள் 23, ஆகஸ்ட் 2010 4:02:03 PM (IST)

விளையாட்டில் வேஸ்ட்... விளம்பரத்தில் பெஸ்ட்: மரியா ஷரபோவா வருமானத்தில் நம்பர் 1
சனி 21, ஆகஸ்ட் 2010 10:05:36 PM (IST)

முத்தரப்பு கிரிக்கெட்: இந்தியா-இலங்கை மோதல்; யுவராஜ்சிங் உடல் தகுதி!
சனி 21, ஆகஸ்ட் 2010 4:20:33 PM (IST)

மெக்குல்லத்தை இடித்த சங்ககராவுக்கு தடை இல்லை: ஐசிசி அறிவிப்பு
சனி 21, ஆகஸ்ட் 2010 3:46:26 PM (IST)

நாகரீகமே தெரியாதவர்கள்: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கங்குலி பாய்ச்சல்!
வியாழன் 19, ஆகஸ்ட் 2010 11:34:49 AM (IST)

தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள்
வியாழன் 19, ஆகஸ்ட் 2010 11:12:41 AM (IST)
சேவாக் சதத்தை தடுக்க சங்ககாரா சதிவேலை: மைக்ரோ போனில் பதிவானது அம்பலம்!
புதன் 18, ஆகஸ்ட் 2010 9:04:15 AM (IST)

ரந்தீவ் 'நோ பால்': ஷேவாக்கிடம் மன்னிப்பு கேட்டது இலங்கை கிரிக்கெட் வாரியம்
செவ்வாய் 17, ஆகஸ்ட் 2010 9:57:43 PM (IST)

சேவாக் அபார ஆட்டம்: போனஸ் புள்ளிகளுடன் இந்தியா அசத்தல் வெற்றி!
திங்கள் 16, ஆகஸ்ட் 2010 10:34:44 PM (IST)