» செய்திகள் » விளையாட்டு

Share

டென்னிஸ் வரலாற்றில் புதிய சாதனை: 10 மணி நேரத்திற்கும் மேலும் ஆட்டம் தொடர்கிறது

வியாழன் 24, ஜூன் 2010 5:49:33 PM (IST)

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. கோர்ட்டு எண்.18-ல் நேற்று நடந்த ஆட்டத்தில் 23-ம் நிலை வீரரான ஜான்இஸ்னெர் (அமெரிக்கா)- நிக்கோலஸ் மகுட் (பிரான்ஸ்) மோதினார்கள்.
 
இந்த ஆட்டம் டென்னிஸ் வரலாற்றில் நீண்ட நேரம் நடந்த போட்டி என்ற புதிய சாதனையை படைத்தது. 10 மணி நேரம் நடந்த இந்த ஆட்டத்தில் இன்னும் முடிவு ஏற்படவில்லை. 5-வது செட்டில் இருவரும் தலா 59 புள்ளிகள் பெற்று இருந்தபோது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அந்த ஆட்டம் இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
 
2-வது செட்டையும் (6-3), மூன்றாவது செட்டையும் (7-6) நிக்கோலஸ் கைப்பற்றினார். முதல் செட்டையும் (6-4), நான்காவது செட்டையும் (7-6) ஜான் இஸ்னெர் கைப்பற்றினார். வெற்றி- தோல்வியை நிர்ணயிக்கும் 5-வது மற்றும் கடைசி செட்டில் இருவரும் 59-59 என்ற கணக்கில் இருந்தபோது போதிய வெளிச்ச மின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. 5-வது செட் மட்டும் 7 மணி நேரம் 6 நிமிடம் (110 கேம்கள்) நடந்தது. ஆனால் இன்னும் முடிவு இல்லை.
 
இதில் இஸ்னெர் 98 ஏஸ்களும் (சர்வீஸ் பந்தை எடுக்க முடியாமல் செல்வது), நிக்கோலஸ் 95 ஏஸ்களும் அடித்தனர். நேற்று நடந்த மற்ற ஆட்டங்களில் முன்னணி வீரர்களான ரோட்டிக் (அமெரிக்கா), ஹெவிட் (ஆஸ்திரேலியா) வெற்றி பெற்றனர். முன்னணி வீராங்கனைகளான ஹெனின், கிலிஸ் டர்ஸ் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads