» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பாகிஸ்தான் அபாரம் - இங்கிலாந்துக்கு ஒயிட் வாஷ்!!

செவ்வாய் 7, பிப்ரவரி 2012 10:30:00 AM (IST)

பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்டில் 71 ரன் வித்தியாசத்தில் போராடி தோற்ற இங்கிலாந்து 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது.

துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த 3வது டெஸ்டில், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 99 ரன்னுக்கும், இங்கிலாந்து 141 ரன்னுக்கும் சுருண்டன. பாக். 2வது இன்னிங்சில் 365 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. அஸார் அலி 157, யூனிஸ் கான் 127 ரன் விளாசினர். 

அடுத்து 324 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து, 4ம் நாளான நேற்று 252 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் ஸ்டிராஸ் 26, குக் 49, மார்கன் 31, டிராட், பீட்டர்சன், பிராடு தலா 18 ரன் எடுத்தனர். பிரையர் 49 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் உமர் குல், சயீத் அஜ்மல் தலா 4, அப்துர் ரகுமான் 2 விக்கெட் வீழ்த்தினர். 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இங்கிலாந்து 0-3 என ஒயிட்வாஷ் படுதோல்வியை சந்தித்துள்ளது. பாகிஸ்தானின் அஸார் அலி ஆட்ட நாயகன் விருதும், சயீத் அஜ்மல் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.


மக்கள் கருத்து


ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads














Thoothukudi Business Directory