» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தென் ஆப்ரிக்கா டி-20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு

சனி 26, அக்டோபர் 2024 4:56:48 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கொண்ட ஆலன் பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் ஆட உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. 

ரோகித்சர்மா தலைமையிலான அணியில் 18 பேர் இடம் பெற்றுள்ளனர். புதுமுகங்களாக வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா, ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார், தொடக்க ஆட்டக்காரர் அபிமன்யூ ஈஸ்வரன், வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளனர். முகமது ஷமி காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் சேர்க்கப்படவில்லை. இடுப்பு பகுதியில் காயத்தால் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்: ரோகித் சர்மா (கே), பும்ரா (து.கே), ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், கில், கோஹ்லி, கேஎல் ராகுல், ரிஷப் பன்ட்(வி.கீ). சர்பராஸ் கான், துருவ் ஜூரல் (வி.கீ), அஷ்வின், ஜடேஜா, சிராஜ், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ரானா, நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர். இதை தவிர முகேஷ்குமார், நவ்தீப் சைனி மற்றும் கலீல் அகமது ரிசர்வ் வீரர்களாக அணியில் இடம் பெற்று இருக்கின்றனர்.

இதேபோல் தென் ஆப்ரிக்காவில் வரும் நவ.8, 10, 13, 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள 4 போட்டி கொண்ட டி.20 தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் சண்டிகரை சேர்ந்த மிடில் ஆர்டர் பேட்டர் ராமன் தீப் சிங், பெங்களூரைச் சேர்ந்த மித வேகப்பந்து வீச்சாளர் விஜய்குமார் வைஷாக் புதுமுகங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணி விபரம் : சூர்ய குமார் யாதவ் (கே), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ), ரின்குசிங், திலக்வர்மா, ஜிதேஷ் சர்மா (வி.கீ), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான் , யாஷ் தயாள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory