» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சொந்த மண்ணில் சோகம்... 46 ரன்களில் சுருண்டது இந்திய அணி!

வியாழன் 17, அக்டோபர் 2024 3:56:45 PM (IST)



நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்திய அணி மோசமான சாாதனை படைத்துள்ளது. 

பெங்களுருவில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ரோகித் 2 ரன்களில் வெளியேறினார். கோலி மற்றும் சர்பராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினர். ஜெய்ஸ்வால் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல், ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினார்.

பந்த் 20 ரன்கள், பும்ரா 1 மற்றும் குல்தீப் 2 ரன்களில் ஆட்டமிழந்தனர். 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.  இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். 5 பேட்ஸ்மேன்கள் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். சொந்த மண்ணில் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுத்துள்ள குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது. இது ஆசிய மண்ணில் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச ரன்களாகவும் உள்ளது. இதற்கு முன்னர் 53 ரன்கள் ஒரு அணி எடுத்ததே குறைந்தபட்ச ரன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் மூன்றாவது குறைந்தபட்ச ரன்னாக இது அமைந்துள்ளது. கடந்த 2020-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடிலெய்டில் 36 ரன்களும், 1974-ல் இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸில் 42 ரன்களும் எடுத்திருந்தது. சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா எடுத்துள்ள குறைந்தபட்ச ரன்களாக இது அமைந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory