» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை சாம்பியன்

திங்கள் 12, செப்டம்பர் 2022 8:33:46 AM (IST)



ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி  6-ஆவது முறையாக இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சூப்பா் 4 பிரிவில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற பாகிஸ்தான்-இலங்கை அணிகள் நேற்று இரவு துபையில் நடந்த இறுதிச் சுற்றில் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பௌலிங்கை தோ்வு செய்தது. முதலில் ஆடிய இலங்கை அணி 170/6 ரன்களைக் குவித்தது. பானுகா ராஜபட்ச அபாரமாக ஆடி 71 ரன்களை விளாசினாா்.  171 ரன்கள் வெற்றி இலக்குடன் ஆடிய பாகிஸ்தான் வீரா்களால் இலங்கை பௌலா்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினா்.

தொடக்க பேட்டா் முகமது ரிஸ்வான் 55 (1 சிக்ஸா், 4 பவுண்டரி), இப்திகாா் அகமது 32 ஆகியோா் மட்டுமே ஒரளவு ரன்களை எடுத்தனா். ஏனைய வீரா்கள் ஒற்றைய இலக்க ரன்களோடு வந்த வேகத்திலேயே நடையைக் கட்டினா். 20 ஓவா்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது பாகிஸ்தான். இலங்கை தரப்பில் பிரமோத் மதுஷன் 4, ஹஸரங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 6-ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory