» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு: யூசுப் பதான் அறிவிப்பு

வெள்ளி 26, பிப்ரவரி 2021 5:42:37 PM (IST)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆல்ரவுண்டர் யூசுப் பதான், அறிவித்துள்ளார்.

38 வயது யூசுப் பதான், 57 ஒருநாள், 22 டி20 ஆட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். 2008-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான யூசுப் பதான், 2012-ல் கடைசியாக விளையாடினார். 100 முதல்தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2 சதங்கள் மற்றும் 3 அரை சதங்கள் எடுத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 33 விக்கெட்டுகளும் டி20யில் 13 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். 

ஐபிஎல் போட்டியில் முக்கியமான வீரராக இருந்த யூசுப் பதான், 2010-ல் மும்பைக்கு எதிராக 37 பந்துகளில் சதமடித்தார். ஐபிஎல் போட்டியின் 2-வது அதிவேக சதம் அது. இந்திய வீரர்களில் முதலிடம். கடைசியாக 2019-ல் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். ஐபிஎல் போட்டியில் 174 ஆட்டங்களில் 3204 ரன்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். ராஜஸ்தான் அணிக்காக 2007-லிலும் கேகேஆர் அணிக்காக 2012 மற்றும் 2014-லிலும் ஐபிஎல் பட்டங்களை வென்றுள்ளார். 

ஓய்வு குறித்த அறிவிப்பில் யூசுப் பதான் கூறியதாவது: இந்தியாவுக்காக ஒருமுறை உலகக் கோப்பையை வென்றதும் சச்சின் டெண்டுல்கரை என் தோளில் தூக்கிச் சுமந்ததும் மறக்க முடியாத தருணங்கள். என்னுடைய சர்வதேச கிரிக்கெட் அறிமுகம் தோனி தலைமையிலும் ஐபிஎல் அறிமுகம் ஷேன் வார்னே தலைமையிலும் ரஞ்சி அறிமுகம் ஜகோப் மார்டின் தலைமையிலும் நிகழ்ந்தன. கெளதம் கம்பீர் தலைமையில் கேகேஆர் அணியில் விளையாடி இருமுறை நாங்கள் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளோம். எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த என்னுடைய சகோதரர் இர்பான் பதானுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam PasumaiyagamThalir Products

Black Forest Cakes


Thoothukudi Business Directory