» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்: தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்

புதன் 20, ஜனவரி 2021 10:28:54 AM (IST)



இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டி, தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

பிரிஸ்பேனில் நடந்த கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று, டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் 2-வது முறையாகக் கைப்பற்றியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்களில் ரிஷப் பந்த் முக்கியமானவர். 89 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதில் ரிஷப் பந்த்தின் பங்கு அளப்பரியது. ரிஷப் பந்த்தின் ஆட்டத்துக்கு இன்று அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ரிஷப் பந்த் புதிய மைல்கல்லை எட்டி, தோனியின் சாதனையையும் முறியடித்துள்ளார். அதாவது டெஸ்ட் போட்டியில் மிகக்குறைந்த இன்னிங்ஸில் வேகமாக ஆயிரம் ரன்களை எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையை ரிஷப் பந்த் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 32 இன்னிங்ஸில் தோனி ஆயிரம் ரன்களை எட்டினார். 

ஆனால், டெஸ்ட் போட்டிகளில் 27 இன்னிங்ஸிலேயே ரிஷப் பந்த் ஆயிரம் ரன்களை எட்டி தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். தோனிதான் மிகக்குறைந்த இன்னிங்ஸில் 1000 ரன்களை எட்டிய இந்திய விக்கெட் கீப்பர் எனும் சாதனையைத் தக்கவைத்திருந்தார். அதை ரிஷப் பந்த் தகர்த்துவிட்டார்.

இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பரூக் இன்ஜினீயர் 36 இன்னிங்ஸிலும், விருதிமான் சாஹா 37 இன்னிங்ஸிலும், நயன் மோங்கியா 39 இன்னிங்ஸிலும் ஆயிரம் ரன்களை எட்டினர். சயத் கிர்மானி 45 இன்னிங்ஸிலும், கிரன் மோர் 50 இன்னிங்ஸிலும் ஆயிரம் ரன்களை எட்டியிருந்தனர்.

உலக அளவில் தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் குயின்டன் டீ காக் 21 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை எட்டி முதலிடத்தில் நீடிக்கிறார். அதைத் தொடர்ந்து இலங்கை வீரர் சந்திமால் (22 இன்னிங்ஸ்), இங்கிலாந்தின் ஜான் பேர்ஸ்டோ (22 இன்னிங்ஸ்), குமாரா சங்கக்கரா (23 இன்னிங்ஸ்) டி வில்லியர்ஸ் (23 இன்னிங்ஸ்) ஆகியோர் பட்டியலில் உள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டில் மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, ரிஷப் பந்த் மிக விரைவாக 50 டிஸ்மிஸல்களை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thalir Products





Black Forest Cakes

Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory