» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் : இந்திய அணியில் மயங்க் அகர்வால்!!

புதன் 11, டிசம்பர் 2019 3:49:12 PM (IST)



வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணியில் காயத்தினால் ஷிகர் தவானுக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டி தொடரில் பங்கேற்கிறது.  இதில், டி20 போட்டிகள் முதலில் நடந்தன.  இதுவரை நடந்த முதல் இரு போட்டிகளில் ஒன்றில் இந்திய அணியும், மற்றொன்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளன. இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது.

இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையே 3 ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளன.  முதல் ஒரு நாள் போட்டி சென்னையில் வருகிற 15ந்தேதி நடைபெற உள்ளது.  இதனை தொடர்ந்து, வருகிற 18ந்தேதி 2வது போட்டியும், 22ந்தேதி 3வது போட்டியும் நடைபெறும்.  இந்த போட்டி தொடரில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் காயத்தினால் விளையாடவில்லை.  அவருக்கு பதிலாக அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Nalam Pasumaiyagam




Black Forest Cakes




Thoothukudi Business Directory