» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஹஷிம் ஆம்லா திடீர் ஓய்வு

வெள்ளி 9, ஆகஸ்ட் 2019 5:01:08 PM (IST)



அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் ஹஷிம் ஆம்லா அறிவித்துள்ளார். 

தென் ஆப்பிரிக்காவுக்காக 44 டி20 சர்வதேச போட்டிகளிலும் ஆடியுள்ளார் ஆம்லா. கடைசியாக உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்கா அணிக்காக ஆடினார் ஆம்லா. 124 டெஸ்ட் போட்டிகளில் 215 இன்னிங்ஸ்களில் 9,282 ரன்களை குவித்த ஹஷிம் ஆம்லாவின் டெஸ்ட் சராசரி 49.97 ஆகும். 28 சதங்களையும் 4 இரட்டைச் சதங்களையும் எடுத்த அபார வீரர் ஆவார் ஹஷிம் ஆம்லா. ஒருநாள் போட்டிகளிலும் பல சாதனைகளில் முன்னிலை பெற்றிருந்த ஹஷிம் ஆம்லா மொத்தம் 8,113 ரன்களை 27 சதங்கள் மற்றும் 39 அரைசதங்களுடன் விளாசியுள்ளார்.

டேல் ஸ்டெய்ன் சமீபமாக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற தற்போது ஆம்லா அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்துள்ளார். ஆனால் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் மசான்சி சூப்பர் லீகிலும் தொடர்ந்து ஆடுவதாகத் தெரிவித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வை 2004இல் இந்தியாவுக்கு எதிராகத் தொடங்கினார். ஒருநாள் மற்றும் டி20 அறிமுகப் போட்டியில் முறையே 2008, மற்றும் 2009-ல்தான் ஆடினார் ஆம்லா.அனைவருக்கும் நன்றி, எல்லாம் வல்ல இறைவனுக்கும் நன்றி என்று ஹஷிம் ஆம்லா தன் பயணம் குறித்து தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications







Thoothukudi Business Directory