» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய பிரித்வி ஷாவுக்கு தடை!

புதன் 31, ஜூலை 2019 4:19:55 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா உள்ளிட்ட மூவர் ஊக்கமருந்து பிரச்சினையில் சிக்கியுள்ளனர்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் வீரரான பிரத்வி ஷாவுக்கு சையத் முஷ்டாக் அலி தொடரில் விளையாடுவதற்காக பிப்ரவரி மாதம் இந்தூரில் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தினை பிரித்வி ஷா உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஜூலை 16ஆம் தேதி அவர் மீது குற்றசாட்டு முன் வைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரித்வி ஷா இந்திய அணியில் விளையாட மார்ச் 16ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம்தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15 முதல் அவர் அணியில் இணைந்து பயிற்சிகள் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுவந்த பிரித்வி ஷா ஏற்கெனவே மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.

நவம்பர் 15ஆம் தேதி முதல் விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வங்க தேச அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க வாய்ப்புகள் உள்ளன. வங்க தேச அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 14ஆம் தேதி தொடங்கவுள்ளது.மும்பையைச் சேர்ந்த பிரித்வி ஷாவை ‘அடுத்த சச்சின்’ எனப் பலராலும் பாராட்டு பெற்றவர். இரண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள அவர் 237 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதமும் அடக்கம். உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றுவரும் ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த திவ்யா கஜ்ராஜ், விதர்பா அணியைச் சேர்ந்த அக்‌ஷய் துல்லர்வார் ஆகியோரும் பிரித்வி ஷாவுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



CSC Computer Education

Black Forest Cakes

Anbu Communications

Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory