» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டி: ஆஸ்திரேலியாவை வென்றது இங்கிலாந்து

வெள்ளி 12, ஜூலை 2019 9:09:13 AM (IST)



நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் ஸ்மித் மட்டுமே நிலைத்து ஆடி 85 ரன்களை சேர்த்தார்.  224 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 32.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து,226 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தொடக்கத்திலேயே ஆர்ச்சரின் ஆக்ரோஷமான வேகப்பந்துவீச்சு, வோக்ஸின் ஸ்விங் பந்துவீச்சு இரண்டும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்துவிட்டது. ஆர்ச்சர் வீசிய பவுன்ஸரில் காரேயின் தாடை கிழிந்து ரத்தம்சொட்டியது.ஆர்ச்சர் நேற்று 10 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது ஓவர்களில் ஒரேஒரு பவுண்டரி மட்டுமே நேற்று விட்டுக்கொடுத்துள்ளார்.

பேட்டிங்கில் ஜேஸன் ராய், பேர்ஸ்டோ கூட்டணி சூழல் அறிந்து, ஆடுகளத்தின் தன்மை அறிந்து பேட் செய்தார்கள் களத்தில் நங்கூரமிட்ட ஜேஸன் ராய் 11-வது ஓவர்கள் முதல் தனது காட்டடிக்கு மாறி, ஸ்கோரை உயர்த்திவிட்டார். முதல் 10 ஓவர்களில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் சேர்த்தநிலையில் அடுத்த 10 ஓவர்களில் 97 ரன்கள் சேர்த்தது. 50 பந்துகளில் ஜேஸன் ராய் அரைசதம் அடித்தார். ஸ்டார்க் பந்துவீச்சில் பேர்ஸ்டோ 34 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 124 ரன்கள் சேர்த்தனர். வரும் 14-ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் நியூஸிலாந்துடன் மோதுகிறது இங்கிலாந்து.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Black Forest Cakes


Anbu Communications



Thoothukudi Business Directory