» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு : அம்பத்தி ராயுடு அதிரடி முடிவு
புதன் 3, ஜூலை 2019 5:11:59 PM (IST)

அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடி வந்தவர் அம்பத்தி ராயுடு. தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தமிழக விஜய்சங்கரை அணியில் சேர்த்தபோது அதிருப்தி தெரிவித்தார். இந்நிலையில், உலக கோப்பை தொடரின்போது ஷிகர் தவான் மற்றும் விஜய் சங்கர் இருவரும் காயம் காரணமாக விலகிவிட்டனர். மாற்று வீரர்களை தேர்வு செய்யும்போது ராயுடுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அம்பத்தி ராயுடு மேலும் அதிருப்தி அடைந்தார்.
அம்பத்தி ராயுடு நிராகரிக்கப்பட்டதை ஐஸ்லாந்து கிரிக்கெட் நிர்வாகம் பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. அம்பத்தி ராயுடுவை தங்கள் நாட்டுக்காக விளையாடும்படி கேட்டுக்கொண்டதுடன், அவருக்கு நிரந்தர குடியுரிமை பெற்றுத் தரவும் முன்வந்தது. இந்நிலையில், ஐபிஎல் உள்பட அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்திருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திராவைச் சேர்ந்த இவர், 2013ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியின்மூலம், சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் இந்திய அணிக்காக 55 ஒருநாள் போட்டிகள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 10 அரை சதங்கள் உள்பட 1694 ரன்களும், டி20 போட்டிகளில் 42 ரன்களும் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக, முதல்தர போட்டிகளில் இருந்து கடந்த ஆண்டே ராயுடு விலகியது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி மீண்டும் முதலிடம்: ஸ்மித்தைப் பின்னுக்குத் தள்ளினார்!!
புதன் 4, டிசம்பர் 2019 5:47:28 PM (IST)

தமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே!!
செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:47:40 PM (IST)

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து தவான் விலகல்: சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு
புதன் 27, நவம்பர் 2019 4:54:29 PM (IST)

அசாருதின், அம்பத்தி ராயுடு மோதல்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் புயல்!!
திங்கள் 25, நவம்பர் 2019 5:36:27 PM (IST)

கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி: தொடரைக் கைப்பற்றியது!!
ஞாயிறு 24, நவம்பர் 2019 5:30:51 PM (IST)

கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: இஷாந்த் 5 விக்கெட்: 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்!
வெள்ளி 22, நவம்பர் 2019 4:54:17 PM (IST)
