» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சிக்ஸரால் தாக்கப்பட்ட ரசிகைக்கு தொப்பி வழங்கிய ரோஹித் ஷர்மா

புதன் 3, ஜூலை 2019 12:48:50 PM (IST)



வங்கதேசத்திற்கு எதிரான போட்டியின்போது தனது சிக்ஸரால் தாக்கப்பட்ட ரசிகைக்கு ஆட்டோகிராஃபுடன் கூடிய தொப்பி வழங்கினார் ரோகித் சர்மா.

2019 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் செவ்வாய்கிழமை மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி சதம் விளாசினார். 92 பந்துகளில் 7 பவுண்டரி, 5 இமாலய சிக்ஸர்களுடன் 104 ரன்களைக் குவித்தார். 

போட்டியின் போது ரோஹித் ஷர்மா பறக்கவிட்ட ஒரு சிக்ஸர் மைதானத்தில் இருந்த தீவிர இந்திய கிரிக்கெட் ரசிகையான மீனா என்பவர் மீது விழுந்தது. இந்நிலையில், போட்டி முடந்த பின்னர் அந்த ரசிகையை சந்தித்து நலம் விசாரித்த ரோஹித் ஷர்மா, அவருக்கு ஆட்டோகிராஃப் உடன் கூடிய தொப்பியை வழங்கி உற்சாகப்படுத்தினார். முன்னதாக, உலக கிரிக்கெட் கொண்டாடிய 87 வயது மூத்த ரசிகையான சாருலதா படேலை போட்டி முடிந்த பின்னர் கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Anbu Communications

Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Thoothukudi Business Directory