» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வேடிக்கையாக விளையாடி பஞ்சாப்பை வீழ்த்தினோம் : விராட்கோலி

வியாழன் 25, ஏப்ரல் 2019 4:31:06 PM (IST)வேடிக்கையாக விளையாடிதான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியதாக பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். 

ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாபை மீண்டும் வீழ்த்தியது. பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் விளையாடியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது. டிவில்லியர்ஸ் 44 பந்தில் 82 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), ஸ்டோனிஸ் 34 பந்தில் 46 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), பார்த்தீவ் படேல் 24 பந்தில் 43 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். முகமது சமி, விஜோயன்ஸ், கேப்டன் அஸ்வின், முருகன் அஸ்வின் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 17 ரன்னில் வெற்றி பெற்றது.நிக்கோலஸ் பூரன் 28 பந்தில் 46 ரன்னும் (1 பவுண்டரி, 5 சிக்சர்), ராகுல் 27 பந்தில் 42 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, ஸ்டோன்ஸ், மொய்ன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள். பெங்களூர் அணி பெற்ற 4-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்று அந்த அணி வாய்ப்பில் நீடித்து வருகிறது. வெற்றி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

எங்களது ஒரே நோக்கம் அணிக்காக சிறப்பாக விளையாடுவது தான். தொடர்ச்சியாக 6 ஆட்டத்தில் தோற்றது உண்மையிலேயே காயத்தை ஏற்படுத்தி விட்டது. இது எங்களுக்கு மிகப் பெரிய பாதிப்பே. வேறு எந்த அணியும் இதே மாதிரி 6 ஆட்டங்களில் தொடர்ந்து தோற்றது இல்லை. கடைசியாக ஆடிய 5 ஆட்டத்தில் நான்கில் வென்றுள்ளோம். 5 ஆட்டத்திலும் வென்று இருந்தால் மகிழ்ச்சியுடன் இருந்து இருப்போம். வேடிக்கையாக விளையாடிதான் இந்த ஆட்டத்தில் வென்றோம். நாங்கள் எந்தவித நெருக்கடியிலும் ஆடவில்லை. எப்படி ஆட வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory