» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கவாஜா மீண்டும் சதம்; இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு

புதன் 13, மார்ச் 2019 5:28:55 PM (IST)இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸி அணி இந்தியாவுக்கு ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸி அணி டி 20  மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களில் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த டி 20 தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. அதையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்  தொடரின் முதல் நான்குப் போடிகளிலும் இரு அணிகளும் தலா இருப் போட்டிகளில் வெற்றி  பெற்று 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதையடுத்து இன்று 5 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று தொடங்கி வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் இறங்கிய ஆஸி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஆரோன் பிஞ்ச் மற்றும் உஸ்மான் கவாஜா சிறப்பான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். பிஞ்ச் 27 ரன்களில் ஜடேஜா பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் சிறப்பாக விளையாடிய ஹான்ஸ்கோம்ப் அரைசதமும் கவாஜா 100 ரன்களும் சேர்த்து அவுட் ஆகி வெளியேறினர்.

அதன் பின்னர் வந்த மேக்ஸ்வெல் 1 ரன்னிலும், ஸ்டாய்னஸ் மற்றும் டர்னர் தலா 20 ரன்களும் கேரி 3 ரன்களும் சேர்த்து வெளியேறினர். கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த ரிச்சர்ட்ஸன் மற்றும் பேட் கம்மின்ஸ் அதிரடியாக விளையாடி ரன் குவிக்க ஸ்கோர் சிறிது உயர்ந்தது. இதனால் ஆஸி அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்களும், ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.  குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

New Shape TailorsNalam Pasumaiyagam

Joseph MarketingCSC Computer Education

Black Forest CakesThoothukudi Business Directory