» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பீல்டிங்கில் சொதப்பியதால் 358 ரன்களை குவித்தும் தோல்வி : கோலி சாடல்

திங்கள் 11, மார்ச் 2019 11:08:56 AM (IST)

மொஹாலியில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்களை எடுத்திருந்தும் அதனை விரட்டி ஆஸ்திரேலிய அணி அசத்தலாக வெற்றி பெற்றது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றிபெற்றது. அந்த அணியின் ஆஸ்டன் டார்னர் இந்திய அணியிடமிருந்து வெற்றியை பறித்தார். ஆஸி.யின் இந்த வெற்றி, தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற இந்தியாவின் நம்பிக்கையை அசைத்து பார்த்துள்ளது. கடைசி 2 போட்டிகளிலும் தோற்றதால் இரு அணிகளும் 2க்கு 2 என்ற சமநிலையில் உள்ளன.

இந் நிலையில் அணியின் தோல்விக்கு மோசமான பீல்டிங், முக்கிய ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டைவிட்டதே காரணம் என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:  பிட்ச் ஆட்டம் முழுதும் நன்றாகவே செயல்பட்டது. 2 ஆட்டங்களிலும் பனிப்பொழிவின் தவறான பக்கத்தில் நாங்கள் அகப்பட்டோம். (கடந்த போட்டியில் பனிப்பொழிவு இருக்கும் என்று சேஸ் செய்தது, இந்தப் போட்டியில் பனிப்பொழிவு இருக்காது என்று முதலில் பேட் செய்தது.... இரண்டும் தவறாகிப்போனது), ஆனால் இதெல்லாம் தோல்விக்கு சாக்கு அல்ல.

கடைசி சில ஓவர்களில் 5 வாய்ப்புகளை கோட்டை விட்டோம், ஆஷ்டன் இன்னிங்ஸ் அபாரம், ஹேண்ட்ஸ் கம்ப் பிரில்லியண்ட் இன்னிங்ஸ், கவாஜா ஒருங்கிணைப்பு இன்னிங்ஸை ஆடினார். கடந்த போட்டியில் பனிப்பொழிவு இருக்கும் என்றனர். ஆனால் அது தவறானது. இங்கு அவர்கள் நன்றாக ஆடினர் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். எந்தப் பகுதியில் அடிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து அடித்தனர். முதலில் பேட் செய்யவே விரும்பினோம், அதில் எந்த வித குழப்பமும் இல்லை. 5வது பவுலர் வேண்டாம் என்று நினைத்தோம் விஜய் சங்கர், சாஹல் பனிப்பொழிவில் வீசினால் கடினம்தான் ஆகவேதான் பனிப்பொழிவுக்கு முன்பாக அவர்கள் ஓவர்களை முடித்து விட நினைத்தோம்.

ஆனால் கடைசியில் மிகவும் ஈரமாக இருந்தது. முதல் பகுதி பந்து வீச்சு பரவாயில்லை. கடைசியில் அவர்கள் அடிக்கத் தொடங்கியவுடன் கடினமானது.ஸ்ட,ம்பிங் வாய்ப்பு மிக முக்கியமானது, பீல்டிங்கில் சொதப்பினோம். டி.ஆர்.எஸ் ஆச்சரியமாக இருந்தது, சீராகவே இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் அது ஒரு பேசுபொருளாக மாறி வருகிறது. கடைசி போட்டி நிச்சயம் சவாலாக இருக்கும், மிகச்சிறப்பாக ஆட வேண்டும். இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரகா 2 முறை கண்கள் திறக்கப்பட்டுவிட்டன, இந்தத் தோல்வி நிச்சயம் காயப்படுத்தும், சரியான வழியில் காயப்படுத்தும். இவ்வாறு கூறினார் விராட் கோலி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


CSC Computer Education

Anbu Communications

Black Forest Cakes

Thoothukudi Business Directory