» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல்: இந்திய வீரர் ஷெரன் தங்கம் வென்றார்!!

திங்கள் 12, மார்ச் 2018 5:26:14 PM (IST)

ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் இந்திய இளம் வீரர் அகில் ஷெரன் தங்கம் வென்றார்.

இதையடுத்து ஐஎஸ்எஸ்எப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் அறிமுக போட்டியிலேயே தங்கம் வென்ற 4-வது இளம் இந்திய வீரர் என்ற பெருமையை அகில் பெற்றார். இந்த போட்டிகள் மெக்ஸிகோ நாட்டின் குவாடல்ஜரா நகரில் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற ஆண்கள் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் போட்டியில் அகில் ஷெரன் புள்ளிகள் குவித்து தங்க பதக்கத்தைத் தட்டிச் சென்றார். அகில் ஷெரன் மொத்தம் 455.6 புள்ளிகளைக் குவித்து முதலிடம் பிடித்தார். இதையடுத்து ஆஸ்திரியா வீரர் பெர்ன்ஹார்ட் பிக்கிள் 452 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்த நிலையில் பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் இறுதிச் சுற்றுக்கு இந்திய வீராங்கனை மனு பாகர் தகுதி பெற்றார். 


மக்கள் கருத்து

நண்பன்Mar 13, 2018 - 10:55:11 AM | Posted IP 103.3*****

சபாஷ் ப்ரோ

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Nalam Pasumaiyagam


Joseph Marketing


Anbu Communications

Black Forest Cakes

CSC Computer Education




Thoothukudi Business Directory