» செய்திகள் » சிறப்பு பார்வை

Share

தமிழகம் முழுவதும் 2,653 விஏஓ பணியிடங்கள்: ஆன்லைனில் விண்ணப்பிக்க!

திங்கள் 26, ஜூலை 2010 9:52:15 AM (IST)

டிஎன்பிஎஸ்சி தேர்வு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 653 விஏஓ பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.  இவற்றில் 1077 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 1576 இடங்களிலும் இவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும்.
 
கல்வித்தகுதி:
 
 தமிழைப் பாடமாக எடுத்து 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது: 1.7.2010 அன்று அனைத்து தரப்பினரும் 21 வயதினை நிறைவு செய்திருக்க வேண்டும். அதிக பட்ச வயது வரம்பு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 40 வயது வரை ஆகும். மற்றவர்கள் 30 வயதை தாண்டியிருக்க கூடாது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அடிப்படையில் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
 
பொது அறிவில் 100 வினாக்களும், பொதுத்தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் ஆகிய இரு பாடங்களும் சேர்த்து 100 வினாக்களும் ஒரே வினாத்தாளில் கேட்கப்படும். இத் தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தேர்வுக் கட்டணம்: ரூ.75/-. விண்ணப்பங்களை தமிழ்நாட்டின் அனைத்து தலைமை தபால் மற்றும் துணை தபால் அலுவலகங்களில் ரூ.30 ஐ நேரடியாக செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
 
தேர்வுக் கட்டணமான ரூ.75ஐ ஏதேனும் ஒரு தபால் அலுவலகத்தில் செலுத்தி அதற்கான ரசீதை விண்ணப்பத்தின் குறிப்பிடப்பட்ட இடத்தில் ஒட்ட வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு வயது, கட்டணங்களில் விலக்கு உண்டு. ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் தேர்வுக்கட்டணம் ரூ.75 மற்றும் விண்ணப்ப கட்டணம் ரூ.30 சேர்த்து ரூ.105ஐ தபால் அலுவலகத்தில் செலுத்தி அதற்கான ரசீதை விண்ணப்பத்துடன் ஒட்டி அனுப்ப வேண்டும்.
 
தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு பெற்றவர்கள் ரூ.30 மட்டும் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் அனுப்ப வேண்டிய முகவரி:
 
தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,
1, கீரிம்ஸ் சாலை, சென்னை- 600 006
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 20.8.2010.
 
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.08.2010.
 
மேலும் விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in/recruitment.htm இணையதளத்தை பார்க்கவும்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads