» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

அழகர் பப்ளிக் பள்ளியில் நாளைய தலைவர்களின் அணிவகுப்பு!

திங்கள் 20, பிப்ரவரி 2012 9:31:29 AM (IST)

கல்வியின் பெருமை யாருக்கு தெரியும்,கல்வியின் சிறப்பு யார் யார் யாருக்கு தெரியும்?

நாம் கேட்டாலும் கிடைக்காத பொக்கிஷம் அல்லவா கல்வி, தவம் இருந்தாலும் கிடைக்காத பலன் அல்லவா கல்வி, கல்வியின் பெருமையும் அருமையும் யாருக்கு தெரியும், இளம் வயதில் கல்வியை அழகுடனும் அதை பயிலுபவர் புரிந்து கொள்ளும் அனுபவத்துடனும் கற்று தரும் அருமையும் பெருமையும் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளிக்கே தெரியும்.
 
ஆடலுடன் பாடலை கேட்பவர்கள் மத்தியில், பாடலுடன் பாடத்தையும் ஊட்டிவரும் கல்வி நிறுவனம் தான் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளி என்றால் அது மிகையாகாது. பொறுப்பான பல பணிகளில் ஒரு குழந்தையின் வளர்ப்பும் அடங்கியுள்ளதை அருகில் இருந்து கவனித்து வருபவர்களை ஆசிரியைகளாக கொண்டுள்ள கல்வி ஸ்தாபனமான தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியில் நாளைய தலைவர்களின் அணிவகுப்பை இன்று கூட கண்கூடாக நாம் காணலாம்.

மாணவர்களின் நலனில் அக்கரை கொண்டுள்ள பெற்றோர்களையும், அவர்களை பெற்றோர்களையும் (தாத்தா,பாட்டி) மகிழ்ச்சி கடலில் நனைத்திடும் வகையில் பெற்றோர்களுக்கான போட்டிகள் நடத்தி சக பெற்றோர்களிடையே நல்லுறவை வலுப் படுத்தி அவர்களையும் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திடும் கல்வி கூடமான தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளி சர்வதேச கட்டிட அமைப்புடன் திகழ்கிறது. 

காற்றோட்டமான பரந்த வகுப்பறைகளில் முப்பரிமாண மழலையர் களிக்கூடங்களுடன் நவீன கற்பித்தல் முறை சாதனங்கள் அடங்கிய  குளிரூட்டப்பட்ட படக்காட்சி அறை மற்றும் கணிணி ஆய்வகம், அதிநவீன ரோபொடிக் ஆய்வகச் சோதனைகள், அறிவியல் ஆய்வகம்,தன்னிலை அறிந்து தரணியை ஆளும் வகையில் நெறிப்படுத்தப்பட்ட வாசிப்பு பயிற்சி முறைகளோடு பயனள்ள நூல்கள் அடங்கிய நூலகமும் இங்குள்ளது.

ஓடி விளையாடும் பருவத்தில் மாணவ செல்வங்கள் ஓய்ந்து விடாத படி பரந்து விரிந்த விளையாட்டு மைதானம் (உள் மற்றும் வெளி அரங்கு) மாணவ செல்வங்களின் சிறப்பு தனித்திறன் வெளிப்படுத்தும் விளையாட்டுப் பயிற்சிகள், தாமதமில்லா பயணத்திற்கான தரமான போக்குவரத்து வசதிகள்,  பாடத்திட்டத்தோடு பரவலான உலகின் நடப்புகளை அறிந்து கொள்ள செய்தித்தாள் வாசிப்புப் பயிற்சி, நட்புணர்வை வளர்ககும் வகையில் பள்ளி குழுமங்களுக்கு இடையே போட்டிகள், தனித்திறன்களை வளர்க்கும் பயிற்சிக் குழுமங்கள், அனுபவ அறிவை வளர்க்கும் பயிற்சிக் குழுமங்கள், திறன்களின் அடிப்படையில் ஏராளமான நிகழ்கலைப் பயிற்சிகள் ஆகியவை மற்றும் தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியின் சிறப்பு அம்சம் அல்ல, 

இணையற்ற கற்பித்தல் முறைகள், மாணவர்களை மையப்படுத்திய ஆளுமைத் திறன்களை வளர்த்தெடுக்கும் பயிற்சிகள், சரியான ஆசிரியர் மாணவர் விகிதம் (25:1), பல்துறைகளை இணைத்த புதுமையான வகுப்பறை கற்பித்தல் முறைகள், நவீன கல்வித் திட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர்களால் வடிவமைக்கப்பட்ட பாடத் தகவல் தொகுப்பு.

மாசற்ற மனத்தினை பெற்றிட மத நல்லிணக்கத்தில், பாரதப் பண்பாட்டில் வழிநடத்தும் கொள்கைகள், கலை ஆர்வத்தையும் தொழில்நுட்பத் திறனையும் வளர்க்கும் பயிற்சிகள், கலைத் திறன்களை வளர்த்துக் கொள்ள எண்ணற்ற வாய்ப்புகள்,தொடுதிரை மூலமாக ஆசிரியர்களால் வடிவமைக்கப்பட்ட வகுப்புகள், காலத்திற்கு ஏற்ப கணினி மூலம் தொடர் திறன்களை மதிப்பிடும் அமைப்புடன் முழுமையான ஆசிரியர் - பெற்றோர்கள் ஒருங்கிணைந்த செயல்பாடுகொண்ட கல்வி நிறுவனமாக இது திகழ்கிறது.

சரளமான ஆங்கிலப் பேச்சுத்திறனை முதன்மையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கல்வித் திறன்களை உள்ளடக்கிய தூத்துக்குடி அழகர் பப்ளிக் பள்ளியில் நாளைய தலைவர்களின் அணிவகுப்பை காண கண்கோடி வேண்டும்.  


மக்கள் கருத்து

முத்துக்குமார்திங்கள் 20, பிப்ரவரி 2012 - 04:49:21 PM | Posted IP 122.1*****

வரவேர்கத்கது

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads














Thoothukudi Business Directory