» செய்திகள் » சிறப்பு பார்வை

Share

கருப்பட்டியின் பெயரை மாற்ற முடிவு:சென்னை லயோலா கல்லூரி மாணவ ஆராய்ச்சியாளர்கள் திட்டம்!

பி. கந்தன் | ஞாயிறு 21, பிப்ரவரி 2010 7:41:05 PM (IST)

 
சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த சைப் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் 107 பேர் பனைதொழில் மற்றும் தொழிலாளர்கள் முன்னேற்றம் குறித்து அடைக்கலாபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். பனைதொழிலாளர்களை ஓருங்கிணைந்து பனை உற்பத்தி பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்த உதவபோவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை லயோலா கல்லூரியை சேர்ந்த சைப் அமைப்பில் 150 மாணவர்கள் படித்து ஆய்வு பணி மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் சமூகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கி பொதுமக்களை கண்டறிந்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்ந்த ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லயோலா சைப் அமைப்பைச் சேர்ந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஜெய சாந்தி தலைமையில் 150 பேர் கடந்த 2 ஆண்டுகளாக பனை தொழில் மற்றும் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்து செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வுக்காக சைப் அமைப்பு திட்ட ஓருங்கிணைப்பாளர் பேராசிரியை ஜெயசாந்தி தலைமையில் 107 மாணவர்கள் பஸ் மூலம் அடைக்கலாபுரத்திற்கு வந்தனர். இங்குள்ள பனை தொழிலாளர்கள், பனை தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோரை நேரில் சந்தித்து விபரம் சேகரித்தனர். மேலும் பனை தொழில் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்தனர். இதற்காக பனைவிளையில் நேரடியாக மாணவர்கள் பனை தொழிலாளர்களுடன் விவாதத்தில் ஈடுப்பட்டனர். இதுகுறித்து லயோலா கல்லூரி சைப் அமைப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெய சாந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சைப் அமைப்பில் உள்ள 107 மாணவர்கள் இங்கு வந்துள்ளோம். இந்த மாணவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக பனை தொழிலாளர் பிரச்னைகள் மற்றும் பனையின் நன்மைகள் குறித்து ஆய்வு செய்தோம். உலகம் வெப்பமயமாதல் குறித்து அனைவரும் பேசுகின்றனர். ஆனால் நிறைய பனை மரங்கள் வெட்டப்படுகிறது. ஆனால் பனை ஓலைகள் தான் ஒசோன் மண்டலத்தை பாதுக்கிறது. பனை வெட்டப்படுவதற்கு காரணம் இத்தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் தொழிலாளர்கள் இத்தொழில் ஈடுப்பட விரும்புவதில்லை.

பனைகள் அதிக நன்மைகள் தருகிறது. தற்போது நாங்கள் 3 வகைகளாக பிரித்து பார்க்கிறோம். அதாவது பனைதொழில் பருவகால தொழிலாக உள்ளது. குறிப்பிட்ட சில காலங்கள் பதனீர் இறக்க முடியவதில்லை. அந்த தொழில் காலங்களில் பனை தொழில் செய்வதற்கு உபகரணங்கள் வாங்குவதற்கு அதிக வட்டி கடன் பெறுவதால் பனை தொழில் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகவிலைக்கு விற்கின்றனர். இவர்களிடம் பெரிய வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.

இனி வரும் காலத்தில் சிதறி கிடக்கும் பனை தொழிலாளர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த போகிறோம். அதோடு இல்லாமல் பொருளாதார ரீதியாக முன்னேற்ற எங்கள் அமைப்பு மூலம் சிறுதொழில் கடன் வழங்கி வேறு யாரிடம் கையெந்தாமல் பார்த்துக்கொள்வோம். அதே போல் உற்பத்தி செய்யும் பொருட்களை சேமிப்பு கிட்டங்கி ஏற்படுத்தி அதன் மூலம் நேரடியாக சந்தைப்படுத்த வேண்டும். இதனால் உற்பத்தி பொருட்களுக்கு விலை கிடைக்கும். கருப்பட்டியின் மகத்துவம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

எனவே பதனீர் பாகு அமுது என்று பெயர் வைத்து நேரடியாக சந்தைப்படுத்த கற்று தரப்படும். மேலும் பனையிலிருந்து கிடைக்க கூடிய இயற்கை உணவு பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அந்த வகையில் இயற்கை உணவு பொருளான கருப்பட்டி என்று கூறி பெருநகரங்களில் சந்தைப்படுத்துவது கடினம். எனவே வேறு பெயரில் அதனை மக்களுக்கு கொண்டு செல்ல போகிறோம். மேலும் பனை தொழிலாளர்களின் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு உதவி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பனை தொழிலாளர்கள் சங்க ஓருங்கிணைப்பாளர் பங்குதந்தை செல்வஜார்ஜ், அடைக்கலாபுரம் பங்குதந்தை நெல்சன்ராஜ், பனை தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அந்தோணி சிலுவை, மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், கடக்குளம் பங்குதந்தை மார்ட்டின் ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து செட்டிக்குளம், கடக்குளம் ஆகிய பகுதியில் கல்லூரி மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads