» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

தூத்துக்குடி போக்குவரத்து பிரச்சனைக்கு தீர்வு என்ன? : நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனஓட்டிகள்

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2019 11:10:07 AM (IST)தூத்துக்குடி மாநகராட்சியில் பல இடங்களில் போக்குவரத்து பிரச்சனை இருப்பதால் வாகனஓட்டிகள் சிரமம் அடைகின்றனர்.

நகராட்சியாக இருந்த தூத்துக்குடி கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகளில் இன்று வரை மாநகராட்சியின் தரத்தை எட்டவில்லை என்பதே பொதுமக்கள் கருத்தாக உள்ளது. குறிப்பாக தூத்துக்குடியின் போக்குவரத்து பிரச்சனை என்பது பல ஆண்டு காலமாகவே தீர்க்கப்படாத ஒரு பிரச்சனையாகவே உள்ளது. இது குறித்து தூத்துக்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவராம் கூறுகையில், தூத்துக்குடி நகராட்சியாக இருந்த போது போக்குவரத்து காவல் பிரிவில் எத்தனை பேர் பணியாற்றினார்களோ அதே எண்ணிக்கையில் தான் தற்போதும் காவலர்கள் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.

அவர்களும் தினசரி ஹெல்மட் சோதனை, வாகனசோதனை, என உயரதிகாரிகள் உத்தரவுபடி செயல்படுவதால் நகரில் போக்குவரத்தை சீரமைப்பது, போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பது குறித்து சிந்திக்க முடிவதில்லை.முன்பு தூத்துக்குடியில் டிஎஸ்பியாக மூர்த்தி இருக்கும் போது பாலவிநாயகர் கோவில் தெரு ரோட்டில் போக்குவரத்து உருவாக்கினார். நகரின் பல போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். அதே போல் டிஎஸ்பியாக செல்வன்நாகரத்தினம் இருக்கும் போதும் விஇ ரோட்டிலிருந்து ஜின் பாக்டரி ரோடு திரும்பும் இடத்தில் போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். ஆனால் தற்போதைய தூத்துக்குடி டிஎஸ்பி., நகரின் போக்குவரத்து பிரச்சனைகளுக்கு நடவடிக்கை எடுக்காதது ஏன் என தெரியவில்லை. அவரும் முன்பிருந்த டிஎஸ்பி.,கள் போல் போக்குவரத்து பிரச்சனைகளை நேரில் ஆய்வு செய்து உரிய தீர்வு காண வேண்டும்.

பாலவிநாயகர் கோவில் தெரு, 1,2,மற்றும் 4ம் கேட் பகுதிகள், ஜெயராஜ் ரோடு, மார்க்கெட் ரோடு, விஇ ரோடு டபிள்யூஜி ரோடு பண்டுகரை சாலை, விவிடி சிக்னல் பகுதிகள், பாளையங்கோட்டை ரோடு, மில்லர்புரம் ஜங்ஷன் என அனைத்து சாலைகளிலும் செல்லும் வாகனஓட்டிகள் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். குறிப்பாக மார்க்கெட் ரோடு எப்போதும் நெரிசலான பகுதியாக இருக்கும் நிலையில் தற்போது தற்காலிக பேருந்து நிலையமும் இதன் அருகே அமைந்திருப்பதால் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலாகவே உள்ளது. 

வாகனபெருக்கம் அதிகரித்து விட்ட இந்த காலகட்டத்தில் தூத்துக்குடியில் அதற்கேற்றாற்போல் சாலை வசதிகள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. எனவே தூத்துக்குடியின் போக்குவரத்து பிரச்சனையை தீர்க்க டிஎஸ்பி., மாவட்ட எஸ்பி ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 


மக்கள் கருத்து

Ramesh_mpFeb 15, 2020 - 11:32:34 PM | Posted IP 173.2*****

தூத்துக்குடி ரயில் நிலையத்தை மீளவிட்டானிற்கு மாற்றுவது மிகவும் முக்கியமான விஷயம்.. ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கண்டிப்பாக அமைய வேண்டும்

IndianNov 13, 2019 - 12:16:34 PM | Posted IP 162.1*****

NO chance to change the RLY station to Meelavittan. Where to change the existing goods shed yard at Meelavittan ?

செல்வராஜ்Oct 20, 2019 - 02:10:50 PM | Posted IP 108.1*****

ஏன் மணயாச்சிக்கு தூத்துக்குடி ரயில் நிலயத்தை மாற்ற வேண்டும். அந்தபக்கம் பினாமிகள் பெயரில் நிறைய இடங்கள் வாங்கி போட்டனாச்சா?

RObertSep 26, 2019 - 12:04:52 PM | Posted IP 162.1*****

Impossible to change the RLY station to Milavittan. Now Milavittan was set for Goods yard . Loading and unloading works are going on smoothly. How to change the goods yard to another place ? Is it possible ? No sufficient space for passenger traffic and train services.

ராஜாAug 28, 2019 - 12:43:03 PM | Posted IP 108.1*****

gd

Issac robinsonAug 22, 2019 - 12:04:06 PM | Posted IP 162.1*****

Change new bus stand to near collector office.All madurai and nellai buses come to that bus stand.new bus stand location change to all markets exmple fish,veg,flower..old bus stand is the same location. Then only city and buildings developing from that location to pudukottai.Town bus are allowed in the old bus stand,establish the road from byepassroad to beachroad.Introduce Ola cabs and price limit fix for Autos..develop the government hospital facilities,street lights fixing for madathur to to industrial areas,also upto koramballam area.."Police serve to people" "People save our environment"..Jaihind..

ROMANAug 22, 2019 - 10:46:35 AM | Posted IP 173.2*****

தூத்துக்குடி பாவம்

குருAug 21, 2019 - 09:01:44 PM | Posted IP 162.1*****

1 ஆம் கேட் டில் சுரங்கபாதை அமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

JamespackiarajAug 21, 2019 - 04:03:36 PM | Posted IP 162.1*****

First no proper roads.roads or worst.highspeed bike drivers .now very dangerous and harsh driving in tuticorin. Madura coats road .1st gate .avm hospital roads are so conjusted. Lots and lots of government change but no improvement in tuticorin.

ஜெரால்டு என்றுAug 21, 2019 - 11:41:08 AM | Posted IP 162.1*****

பழைய மாநகராட்சி யின் கிழக்கு பகுதியில் உள்ள கொடவுண்களையும் லாரி செட்டுக்களையும் ஊருக்கு வெளியே கொண்டுசெல்ல வேண்டும் லாரிகள் உள்ளே வருவதை நிறுத்தினால் பாதி போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும்

AnandAug 21, 2019 - 11:38:35 AM | Posted IP 162.1*****

New bus stand near fisheries college and railway station to meelavittan - only solution

ஜெரால்டு BAug 21, 2019 - 11:35:13 AM | Posted IP 162.1*****

முதலில் ஊருக்குள் இருக்கும் லாரி செலவுகளையும், கிட்டங்கிகளையும் ஊருக்கு வெளியே கொண்டுசெல்ல வேண்டும். பழைய மாநகராட்சியின் கிழக்கே உள்ள அனைத்து கோடவுன்க ளையும் ஊருக்கு வெளியே கொண்டுசெல்ல வேண்டும்

AnanthAug 21, 2019 - 11:35:09 AM | Posted IP 162.1*****

Bus stand opp to Fisheries college and railway station to meelavittan - only way

TN69 Govt busAug 21, 2019 - 05:38:17 AM | Posted IP 162.1*****

Already Provided Four-way track like vaduku Mandalam 3rd gate bridge to Pudur pandiapuram, then Head post office to mullakadu roads. While asish Kumar IAS implemented schemes like To provide 4lane 200feet roads from 3rd mile road to old harbour- old harbour to Nagar vilakku camp 1 - old harbour to therespuram - srra Hospital junction to Periaya market road - 1st gate, 2nd gate, 4th gate up-to meelavittan railway gate underground subways or mini bridges with 120feet roads then and there, Widening of buckle channel roads from maniyaachi too. Widening roads from mattakadai to junction of 1,2,3rd railwaygates newbustand roads 4thgates Roads to meelavittan as a 120feet roads after arranging proper sewage systems. 'CITY DEVELOPING IS BETTER THAN THE SELF DEVELOPMENT.' so do better think better for a good way like the developing roads at Kovilpatti. Take smart move Rulers of TCMC and Merchant Associations especially Politician's Before, Now After... Etc

அ,ரெங்கராஜன்Aug 20, 2019 - 09:40:46 PM | Posted IP 108.1*****

ஓருங்கினைந்த பஸ் ஸ்டான்ட் ஓன்றே தீர்வு ..

MASSAug 20, 2019 - 03:16:52 PM | Posted IP 162.1*****

ஷேர் ஆட்டோக்களும் மினிபஸ்களும் ஒழுக்கமில்லாமல் கண்டஇடங்களில் நிறுத்துவது .இதை ஒழுங்குபடுத்தினால் பாதிநெரிசல் குறையும்

ஒருவன்Aug 20, 2019 - 02:54:59 PM | Posted IP 162.1*****

ஹெல்மெட்க்கு எப்படி பணம் பறிப்பது மட்டும் தெரியும் . ஆனால் அந்த வேலை (ரோடு சேதமடைந்தாலும் , நெரிசலில் சிக்கினாலும்) சரியாக தெரியாது.. இனி அந்த வேலையை சரியாக பாருங்க ...

உண்மைAug 20, 2019 - 01:59:29 PM | Posted IP 108.1*****

காய்கறி மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்யலாம்

குமார்Aug 20, 2019 - 01:36:18 PM | Posted IP 173.2*****

ரயில் நிலையத்தை மீளவிட்டானுக்கும், பேருந்து நிலையத்தை மீன்வளக்கல்லூரி எதிரிலும் மாற்றுவதே இதற்கு நிரந்தரமான தீர்வு.....

ராஜுAug 20, 2019 - 01:28:27 PM | Posted IP 173.2*****

திரு.ராமநாதபூபதி கருத்தை ஆமோதிக்கிறேன்

ராஜாராம்Aug 20, 2019 - 01:24:12 PM | Posted IP 173.2*****

தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட் சாலையை ஒரு வழிப் பாதையாக மாற்றலாம், பல சந்திப்பு சாலைகளில் வேகத்தடை அமைத்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். DSP ஆபிச வீட்டு கீழே இறங்கி வேலை செய்ய வேண்டும்.

ராமநாதபூபதிAug 20, 2019 - 12:48:51 PM | Posted IP 173.2*****

அன்று பெரியசாமி தூத்துக்குடி ரயில்வே நிலையத்தை மீளவிட்டானுக்கு மாற்றவேண்டும் என்று சொன்னபோது அனைவரும் கிண்டல் செய்தனர். இன்று அதன் பலன் தெரிகிறது. இப்போ மீளவிட்டானுக்கு ரயில்வே நிலையத்தை மாற்றக்கூடாது. மாறாக மணியாச்சிக்கு மாற்றவேண்டும். தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி வரை நான்கு வழி சாலை அமைக்கவேண்டும். அப்போ தான் தூத்துக்குடி உருப்பட வழி பிறக்கும்

சேகர்Aug 20, 2019 - 11:42:16 AM | Posted IP 162.1*****

ஒருங்கிணைத்த பஸ்ஸ்டாண்டை மீன்வள கல்லுரிக்கு எதிரிலும், ரயில்வே நிலையத்தை மீளவிட்டானுக்கும் மாற்றினால் ஒழிய வேறு தீர்வே கிடையாது

ANTONY RAMESHAug 20, 2019 - 11:35:54 AM | Posted IP 108.1*****

இன்று காலை 9 மணிக்கு 1ம் கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory