» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை

நல்லத்தண்ணி தீவில் இருந்து குடிநீர் விநியோகம்: தூத்துக்குடி மூத்த வழக்கறிஞர் யோசனை..!!

செவ்வாய் 17, ஜனவரி 2017 3:47:44 PM (IST)தூத்துக்குடி மாநகரில் நிலவும்  குடிநீர் பிரச்சனையை தீர்க்க நல்லத்தண்ணி தீவில் இருந்து கடல் நீரை பயன்படுத்தலாம் என மூத்த வழக்கறிஞர் யோசனை தெரிவித்துள்ளார்.

துாத்துக்குடி நகர மக்களுக்காக முதலில் தண்ணீர் கொண்டு வந்தவர்  குரூஸ் பா்னாந்து ஆவார். காலப்போக்கில் துாத்துக்குடி வளர்ச்சியடைந்து நகராட்சியாகி பின்னர் மாநகராட்சியாகி விட்டது. ஆனால் நம் நகரில் வண்டிகளில் மக்கள் குடங்களை கொண்டு செல்வதையும் தண்ணீருக்கு வரிசையில் நிற்பதையும் தான் இப்போது எங்கு பார்த்தாலும் அதிகம் பார்க்க முடிகிறது. இந்நிலையில் நகரின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க தூத்துக்குடியைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.சுந்தரம் கூறியதாவது: 

தூத்துக்குடிக்கும் நல்லதண்ணீர் தீவு 50 கி.மீ கடல் வழி தூரத்தில் உள்ளது. நல்ல தண்ணீர் தீவு நம்புதலை மற்றும் ஆர்.எஸ். மங்களம் அருகில் உள்ளது. கிழக்கு கடற்க்கரை சாலை வழியாக செல்ல வேண்டுமானால் தூத்துக்குடி, சிப்பிகுளம், வைப்பார், சூரங்குடி, சாயல்குடி வழியாக சென்று கடல் மார்க்கத்தை அடையலாம். 

நல்ல தண்ணீர் தீவில் நல்ல குடிநீர் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு ஒரு ராட்சத பம்ப் மாத்திரமே தேவை. கடல் வழி மார்க்கமாக ஒரு பெரிய குழாய் மூலமாக தூத்துக்குடிக்கு தண்ணீர் கொண்டு வந்து சுத்திகரித்து தண்ணீரை விநியோகிக்கலாம். இது உப்புநீரை குடிநீராக மாற்றுவதை காட்டிலும் செலவு குறைவானது. எப்படி மெக்காவில் லட்சக்கனக்கான லிட்டர் குடிநீர் கிடைக்கிறதோ, அது போல கிடைக்க வாய்ப்பு உண்டு. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து

R. Babu Kandasamy.Apr 12, 2018 - 07:41:13 PM | Posted IP 162.1*****

Hope you might have conveyed the idea to the proper authorities. if not please do the same. Any assistance is needed,the followers may be contacted and try to give pressure to the concerned authorities.

எஸ்.டீ.கணேசன்.Oct 13, 2017 - 09:42:09 AM | Posted IP 110.2*****

சூப்பர் ஐடியா சார்

BabistonJul 6, 2017 - 08:28:17 AM | Posted IP 168.2*****

சூப்பர் ஐடியா சார்

ரஞ்சித் jJul 5, 2017 - 10:28:10 AM | Posted IP 61.2.*****

சூப்பர்

B.SARATHSRIRAMJun 26, 2017 - 11:25:44 AM | Posted IP 117.2*****

குட் news

WELLINGTONமே 27, 2017 - 10:12:07 PM | Posted IP 59.93*****

GOOD IDEA, BUT THE POLITICIANS WILL NOT DO THIS THINGS.THEY EXPECT COMMISSIONS ONLY.

சுந்தர்.மே 21, 2017 - 12:20:28 PM | Posted IP 117.2*****

அருமையான முடிவு சீக்கிரம் அரசு செயல் படுத்த வேண்டும்

சி.சந்திராசேகர்மே 18, 2017 - 03:07:43 PM | Posted IP 42.10*****

குட் ஐடியா

RameshMar 20, 2017 - 12:00:34 AM | Posted IP 42.11*****

Super

ராமசுப்பிரமணியன்Mar 8, 2017 - 09:24:40 AM | Posted IP 122.1*****

துட்டு கிடைச்சா நம்பாளுங்க பண்ண ரெடி

selvamFeb 28, 2017 - 02:03:25 PM | Posted IP 117.2*****

super,

SEENIVASANFeb 13, 2017 - 08:00:54 PM | Posted IP 117.2*****

பொது மக்கள் நல்ல தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்தவும் நமக்கு நல்லது மேலும் நீர் நிலைகளை சுத்தமாக வைக்க வேண்டும்

SEENIVASANFeb 13, 2017 - 07:59:58 PM | Posted IP 117.2*****

நல்ல ஐடியா

ashokkumarJan 29, 2017 - 09:44:52 AM | Posted IP 61.2.*****

வெரி good

arunJan 24, 2017 - 12:39:10 PM | Posted IP 163.4*****

நாசமா போச்சு ...நடக்கிறதா பேசுங்க அண்ணா ..பெரும் தொழிற்சாலைகளுக்கு தண்ணியிரை கொடுத்து தாமிரபரணியை நாசமாக்கியச்சு .சிறிய தடுப்பணைகள் கட்ட வக்கில்லை ,ஸ்ரீவைகுண்டம் அணையை இன்னும் சரியாக தூர்வார வில்லை . எளிதாக முடிக்க வேண்டிய காரியங்களையே செய்ய வக்கில்லாதவர்கள் இதை செய்ய போகிறார்களா ? மேலும் நல்ல தண்ணீர் தீவில் இப்போது தண்ணீர் முன்பு போல் இல்லை .அதை மீனவர்களிடம் கேட்கலாம் ,

வடிவேல்Jan 19, 2017 - 06:41:35 PM | Posted IP 117.2*****

அத செய்வதுக்குள்ள எவ்வளவு பணம் ஆட்டைய போடலாம்ன்னும் இருப்பானுங்க இந்த அரசியல் வாதிகள்.

vigneshJan 19, 2017 - 12:13:57 PM | Posted IP 27.62*****

Super good news plz gover mend soppret

V.Mayan TuticorinJan 19, 2017 - 08:28:55 AM | Posted IP 117.2*****

SUPER SUGGESTIONS

நண்பன்Jan 18, 2017 - 04:41:54 PM | Posted IP 115.2*****

அருமையான யோசனை.. இதை உடனே நிறைவேற்ற வேண்டும்..

Dee KayJan 18, 2017 - 03:29:57 PM | Posted IP 117.2*****

Sundaram sir, your information is now highly precious to our top level Tuticorin govt officials and we request them to study the info and execute asap. Once again thank you very much for your precious info.

M.sundaramJan 18, 2017 - 12:28:38 PM | Posted IP 117.2*****

Previously any project you want to implement, it needs the approval of Amma. it is is good opinion for solution. The corporation should prepare the feasibility, technical and financial report and submit to the govt for perusal and permission. Now we want immediate solution.

Thomas isonJan 18, 2017 - 12:18:53 PM | Posted IP 157.5*****

Super idea sir

வேலாயுதம்Jan 18, 2017 - 11:38:26 AM | Posted IP 8.37.*****

அருமை

RajaramJan 18, 2017 - 11:23:07 AM | Posted IP 157.5*****

Good idea Take immediate plan to work and solve Tuticorin entire people's benefits

பாலாJan 18, 2017 - 11:11:47 AM | Posted IP 45.11*****

நல்ல ஆலோசனை அய்யா!!!

VijayanJan 18, 2017 - 10:07:31 AM | Posted IP 122.1*****

Good I will appreciate the plan

APJ ARIJan 18, 2017 - 09:42:53 AM | Posted IP 59.90*****

GOOD SIR

ஒருவன்Jan 18, 2017 - 09:02:22 AM | Posted IP 61.3.*****

சூப்பர் .. ஆனால் செய்யுங்க ..

ஆத்தூர் ராஜாராமன்Jan 18, 2017 - 08:03:57 AM | Posted IP 117.2*****

நல்ல கருத்து . அதை செய்ய மாவட்ட தலைவர் முடிவு செய்ய வேணும்

தாம்பரஸ் பாலாஜிJan 18, 2017 - 07:12:48 AM | Posted IP 45.11*****

சார் சூப்பர் தகவல்

நா.வெங்கடேசன்Jan 18, 2017 - 06:52:40 AM | Posted IP 117.2*****

தக்க சமயத்தில் நல்ல யோசனை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications

CSC Computer EducationNalam Pasumaiyagam
Thoothukudi Business Directory