» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேரள மாநில தேர்தலை முன்னிட்டு குமரி. எல்லை பகுதிகளில் 2 நாட்கள் மது விற்க தடை

செவ்வாய் 8, ஏப்ரல் 2014 11:36:47 AM (IST)

கேரள மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, குமரி மாவட்டத்தில் மது விற்பனை செய்ய 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக குமரி மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் வாக்குபதிவு நடைபெறும் நாள் மற்றும் வாக்குப்பதிவு முடியும் நேரத்திற்கு 48 மணி நேரம் முன்னதாக உள்ள காலத்தை ‘வறட்சி காலம்’ என அறிவித்து ஆணையிட்டுள்ளது. 

இந்த காலத்தில் மதுபான கடைகள் மற்றும் உணவு விடுதிகளுடன் கூடிய மதுபான கூடங்கள் போன்றவற்றில் மது விற்பனை மற்றும் பரிமாறுதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 24–ந் தேதி நடைபெறுகிறது. 

அண்டை மாநிலமான கேரளாவில் நாளை மறுநாள்(10–ந் தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இரு வாக்குப்பதிவு நாட்களில் கன்னியா குமரி–கேரளா எல்லைப் பகுதியில் தேர்தல் சுமூகமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் பொருட்டு கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் குமரி–கேரள எல்லைப் பகுதியில் மேற் கண்ட ‘வறட்சி காலம்’ அறிவிப்பு குமரிமாவட்டத்தில் அதாவது கேரள எல்லைப் பகுதிக்கும் நீட்டித்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதனால் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள டாஸ்மாக் சில்லறை மது பானக் கடை எண்கள் 4818, 4819, 4820, 4821, 4822, 4823, 4824, 4825, 4829, 4835, 4838, 4841, 4878, 4883, 4886, 4894, 4895 மற்றும் களியக்காவிளை, பனச்சமூடு பகுதியில் உள்ள 2 மதுபானக் கூடங்களும் இன்று மாலை 6 மணி முதல் 10–ந் தேதி மாலை 6 மணி வரை செயல்பட தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது. அந்த காலக்கட்டத்தில் மதுபான விற்பனை மற்றும் பரிமாறுதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsThoothukudi Business Directory