» செய்திகள் » தமிழகம்

Share

அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு நூலகப் பணியாளர் தேர்வு விண்ணப்பம் விநியோகம்

வியாழன் 29, ஜூலை 2010 11:21:39 AM (IST)

சென்னை கோட்டூர்புரத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு 99 நூலகப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கான தேர்வுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை சென்னை மாவட்ட நூலக அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகின்றன.

3 பதவிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடைபெறும். ஒரு பதவிக்கு ரூ.500 கட்டணம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ. 250 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். குறிப்பிட்ட நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணிவரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட நூலக அலுவலர், 735, அண்ணாசாலை, சென்னை என்ற முகவரியில் விண்ணப்பம் கிடைக்கும். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கார்ப்பரேசன் வங்கி ஆகிய வங்கிக் கிளைகளிலும் விண்ணப்பப்படிவங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்று மாவட்ட நூலக ஆணைக் குழு அறிவித்துள்ளது.


மேலும் தொடரும் செய்திகள்

ரஜினி மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!

வெள்ளி 3, செப்டம்பர் 2010 10:42:13 AM (IST)

Sponsored Ads