» செய்திகள் » தமிழகம்

Share

நடுக்கடலில் 4 நாட்களாக உயிருக்கு போராடிய 5 இலங்கை மீனவர்கள் மீட்பு

ஸ்ரீ | புதன் 28, ஜூலை 2010 10:27:40 PM (IST)

இலங்கையில் உள்ள நீர்க்கொழுமப மீன்பிடிதுறைமுத்தில் இருந்து ஒரு விசைப்படகில் 5 மீனவர்கள் கடந்த 24ம் தேதியன்று புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்கள் கன்னியாகுமரிக்கு கிழக்கே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அவர்கள் படகு பழுதாகியுள்ளது.
இதனை அவர்கள் சரிசெய்யமுயன்றும் முடியவில்லை என்பதால் வாக்கிடாக்கி மூலம் இலங்கை கடற்படையை தொடர்புகொண்டு தகவல்தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கடலில் ஏற்பட்ட சூறாவளிக்காற்றில் சிக்கிகொண்டதால் அவர்களது படகு மேற்குநோக்கி இழுத்து செல்லப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் இந்திய கடலேரா காவல்படைக்கு தகவல் கொடுத்து தங்கள் நாட்டு மீனவர்களை மீட்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்நிலையில் கேரள கடலோர காவல்படை கப்பலான சமர் கன்னியாகுமரியில் இருந்து வடமேற்கில் 168 கடல்மைல் தொலைவில் படகில் தத்தளித்த 5 மீனவர்களையும் மீட்டுள்ளது.
மேலும் அவர்கள் 5 பேரையும் தமிழக கடலோரகாவல்படையினரிடம் நேற்று மாலை கேரள கடலோர காவல் படையினர் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் 5பேரையும் படகுடன் தூத்துக்குடி பழையதுறைமுகத்திற்கு அழைத்து வருகின்றனர்.


மேலும் தொடரும் செய்திகள்

ரஜினி மகள் திருமணம்: பிரபலங்கள் வாழ்த்து!

வெள்ளி 3, செப்டம்பர் 2010 10:42:13 AM (IST)

Sponsored Ads