» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரின் கட்சிப் பொறுப்புகள் பறிப்பு: இபிஎஸ் அதிரடி!
வியாழன் 16, ஜூலை 2026 3:16:27 PM (IST)

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க.வில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி விவாதங்களைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டப் புதிய செயலாளராகப் பசுபதி நியமிக்கப்பட்டார். மாவட்டச் செயலாளர் பசுபதி தரப்பினருக்கும், சி.வி. சண்முகம் தரப்பினருக்கும் இடையே கட்சிப் பணிகளில் முரண்பாடுகள் நீடித்து வந்தன.
கடந்த ஜூலை 9 ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வாகனங்கள் மீது கல்வீச்சு மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் 11 பேர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:44:45 AM (IST)

நெல்லையில் பண மோசடி வழக்கு: 2 இளம்பெண்கள் அதிரடி கைது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:37:00 AM (IST)

சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ரூ.3.54 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:19:23 AM (IST)

மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:37:18 AM (IST)

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நிதியமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:24:32 PM (IST)








