» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு: வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்க புதிய எண் அறிவிப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 12:21:22 PM (IST)

அரசு அலுவலகங்களில் லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்கும் நோக்கில், பொதுமக்கள் தங்களின் புகார்களை எளிதாகத் தெரிவிக்கும் பொருட்டுப் புதிய வாட்ஸ்-அப் எண்ணைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு அலுவலர்கள் லஞ்சம் கோரினால் பொதுமக்கள் 94981 80936 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் நேரடியாகப் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தலைமைச் செயலர் எம். சாய் குமார், அனைத்துத் துறைச் செயலர்கள், இயக்குநர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விபரம்:
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு அறிவிப்புப் பலகைகளைக் கட்டாயமாகக் காட்சிப்படுத்த வேண்டும். அந்தப் பலகைகளில் ‘லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம்’ என்ற வாசகம் பொதுமக்களுக்குத் தெளிவாகத் தெரியும் வகையில் இடம்பெற வேண்டும். அத்துடன், தமிழிலும் ஆங்கிலத்திலும் புகார் அளிக்கும் நடைமுறைகள் குறித்த மாதிரி விபரங்கள் அலுவலகங்களில் வைக்கப்பட வேண்டும்.
அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் இந்த வாட்ஸ்-அப் புகார் எண் மற்றும் ஊழல் தடுப்பு, கண்காணிப்பு இயக்ககத்தின் (DVAC) இணையதள முகவரியை வெளியிட வேண்டும். வாட்ஸ்-அப் மட்டுமின்றி, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், 044-22321090, 22321085, 22310989, 22342142 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் பொதுமக்கள் தங்களின் புகார்களைப் பதிவு செய்யலாம்.
எழுத்துப்பூர்வமான புகார்களை, ‘இயக்குநர், லஞ்ச ஒழிப்புத் துறை, 293, எம்.கே.என் சாலை, ஆலந்தூர், சென்னை-16’ என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகள் நவம்பர் 1ம் தேதி நடைபெறும் - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:44:45 AM (IST)

நெல்லையில் பண மோசடி வழக்கு: 2 இளம்பெண்கள் அதிரடி கைது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:37:00 AM (IST)

சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா ரூ.3.54 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு அரசு உத்தரவு!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:19:23 AM (IST)

மீனவ கிராமங்கள் வளர்ச்சிக்கு ரூ.1,000 கோடி சிறப்புத் தொகுப்பு தேவை: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
புதன் 12, ஆகஸ்ட் 2026 10:37:18 AM (IST)

பராமரிப்புப் பணி: நாகர்கோவில் - கோவை, மும்பை ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 5:07:57 PM (IST)

நிதியமைச்சர் மரிய வில்சன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:24:32 PM (IST)








