» செய்திகள் » தமிழகம்
ஜெயலலிதாவுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு: தானே புயல் நிவாரணத்திற்கு ரூ.10லட்சம் வழங்கினார்
வெள்ளி 27, ஜனவரி 2012 11:09:19 PM (IST)

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்து தானே புயல் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார்.
கடந்த டிசம்பர் மாதம் 30ம் தேதி வீசிய தானே புயலால் தமிழகத்தில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த புயலுக்கு 48 பேர் பலியாகினர். பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலூர் மாவட்டம் தற்போது தான் ஓரளவு மீண்டு வந்து கொண்டிருக்கிறது. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி வருகிறது.
இந்நிலையில் தானே புயல் நிவாரண நிதிக்கு தானும் ஏதேனும் கொடுக்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நினைத்தார். இதையடுத்து அவர் இன்று தலைமைச் செயலகத்திற்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அவரிடம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது உயர் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது, முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத் தான் சந்தித்தேன். எனது உடல் நலம் தேற வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றி கூறினேன். விரைவில் புதிய படம் மூலம் எனது ரசிகர்களை சந்திப்பேன் என்றார். உடல் நலம் தேறிய பிறகு ரஜினிகாந்த் ஜெயலலிதாவை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
மக்கள் கருத்து
தமிழன்சனி 28, ஜனவரி 2012 - 05:00:52 PM | Posted IP 122.1*****
வி ஜி பி கூட பத்து லட்சம் தான் குடுத்து இருக்கு இந்தியனே .அவர்களிடம் எவ்வளோ சொத்து இருக்கு தெரியுமா ?
ரஜினி பாலாசனி 28, ஜனவரி 2012 - 04:55:56 PM | Posted IP 122.1*****
தெரிஞ்சு கொடுப்பதை விட தெரியாமல் கொடுப்பவர் தான் ரஜினி .அவர் கொடுத்தது இந்தியன் அவர்களுக்கு வேனா தெரியாமல் இருக்கலாம் .தமிழன் ஆகிய அனைவர்க்கும் தெரியும் .எங்க தங்க காசுக்கு மேலே அவர் செஞ்சுட்டார்
போடாசனி 28, ஜனவரி 2012 - 01:57:55 PM | Posted IP 122.1*****
மக்கள் கருத்து தேவை இல்லை
ரவிசனி 28, ஜனவரி 2012 - 01:56:11 PM | Posted IP 122.1*****
கொடுக்கிற கை தான் கொடுக்கும்
ரஜினி ரசிகன்சனி 28, ஜனவரி 2012 - 01:00:06 PM | Posted IP 122.1*****
தலைவா உன் மனசு உலகம் முழுவதும் தெரியும் .உங்களை போல ஒரு மகான் இனி பிறக்க மாட்டான்.நீ ! நீ ! தான் .
வாழ்க நீ வளர்க உன் புகழ்
indianசனி 28, ஜனவரி 2012 - 12:04:02 PM | Posted IP 122.1*****
rajini neengalam 20 to 30 cr kodukalam or cuddalore villupuram nagai la ethavathu oru areava adopt pannalam . nanga unga viyarvaiku oru savaran thanga kasu koduthom ana enga uiruku neenga vaitha vilai 10 ls y this kola veri
மேலும் தொடரும் செய்திகள்

ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட சர்ச்சுகளில் இன்று சிறப்பு பிரார்த்தனை
புதன் 22, பிப்ரவரி 2012 6:06:06 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க ஒத்துழைப்பு: போராட்ட குழுவினருக்கு சரத்குமார் வேண்டுகோள்
புதன் 22, பிப்ரவரி 2012 5:22:13 PM (IST)

போட்டியிட மனுவை தாக்கல் செய்து டெபாசிட் தொகையை கட்டாத வேட்பாளர்
புதன் 22, பிப்ரவரி 2012 5:20:51 PM (IST)

கைது நடவடிக்கையின் போது நடராஜனுடன் இருந்த அதிமுகவினர் நீக்கம் : முதல்வர் ஜெ அதிரடி
புதன் 22, பிப்ரவரி 2012 4:22:58 PM (IST)

துணை நடிகைகளை வைத்து பாலியல் தொழில்: பிரபல நடிகை கைது - பொறிவைத்து பிடித்த போலீஸ்!!
புதன் 22, பிப்ரவரி 2012 4:15:38 PM (IST)



ரஜினி ஸ்ரீதர்புதன் 8, பிப்ரவரி 2012 - 11:21:20 AM | Posted IP 123.2*****