» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குதிரை பேரம் விவகாரம்: செந்தில் பாலாஜி முன் ஜாமீன் மனு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு!
புதன் 8, ஜூலை 2026 12:55:44 PM (IST)

எம்.எல்.ஏ-க்களைக் குதிரை பேரம் பேச முயன்ற வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகலுக்குத் தள்ளிவைத்துள்ளது.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க, ₹35 கோடி சன்மானம் தருவதாகச் சிலர் தன்னிடம் பேரம் பேசியதாகக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக (தமிழக வெற்றிக் கழகம்) எம்.எல்.ஏ என்.இளையராஜா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த திருவல்லிக்கேணி போலீஸார், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் (YouTuber) திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோருக்குப் போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால், இவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி அசோக் குமார் மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். அசோக் குமாரின் மனுவுக்குக் காவல்துறை பதிலளிக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த இரு மனுக்களும் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தன. அப்போது, இருவரின் முன் ஜாமீன் மனுக்களையும் எதிர்த்து வாதிடுவதற்காகக் காவல்துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் (Senior Counsel) ஆஜராகவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இந்த வழக்கின் விசாரணையைச் சற்று தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஊழல் புகாரில் சிக்கினால் பதவி நீக்கம்: அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:18:32 AM (IST)

பாராசிட்டமால் சிரப்பில் ஆல்கஹால் அளவு குறித்து வதந்தி: பொது சுகாதாரத்துறை அறிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 11:13:35 AM (IST)

இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு: மாநிலத் துணைத் தலைவர் கண்டனம்!
வெள்ளி 17, ஜூலை 2026 11:01:05 AM (IST)

கோவை, பொள்ளாச்சி, பழனி வழியாகத் திருச்செந்தூர் ரயில் சேவை: மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 10:42:36 AM (IST)

அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணம்: அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு விளக்க நோட்டீஸ்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:10:22 AM (IST)

சென்னை - கன்னியாகுமரி புல்லட் ரயில் திட்டம்: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!
வியாழன் 16, ஜூலை 2026 4:59:47 PM (IST)








