» செய்திகள் » தமிழகம்

கான்ட்ராக்டரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக புகார்: சசிகலாவின் உறவினர் ராவணன் திடீர் கைது

வெள்ளி 27, ஜனவரி 2012 4:43:09 PM (IST)

கான்ட்ராக்டரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் சசிகலாவின் உறவினர் ராவணனை கோவையில் போலீசார் இன்று கைது செய்தனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அதிமுகவில் அதிகார மையமாக விளங்கிய ராவணன் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அதிமுகவில் அதிகாரம் மிக்கவர்களாக செயல்பட்டு வந்தனர். இவர்கள் மீது அடுத்தடுத்து ஏராளமான புகார்கள் ஜெயலலிதாவுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து சசிகலா, அவரது கணவர் நடராஜன், தம்பி ராமச்சந்திரன், கோவை ராவணன், திருச்சி கலியபெருமாள், சசிகலாவின் தம்பி திவாகரன் உள்பட பலர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். சசிகலாவின் குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்த அதிமுக நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, சசிகலாவின் உறவினர்கள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தீவிரமாக விசாரிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கஸ்தூரி என்பவரின் வீட்டை தரை மட்டமாக்கியதாக சசிகலாவின் தம்பி திவாகரன் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. 

அதைத் தொடர்ந்து அவரை பிடிக்க எஸ்.பி. சேவியர் தன்ராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தற்போது சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் உள்ள இளவரசியின் வீட்டில் சசிகலா தங்கியுள்ளார். அந்த வீட்டிலும், நீலாங்கரையில் உள்ள பாஸ்கரனின் வீட்டிலும் திருவாரூர் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அங்கு திவாகரன் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மேற்கு மாவட்டங்களில் அதிமுகவின் அதிகார மையமாக விளங்கிய ராவணன், ஒரு வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வருவதை அறிந்து சென்னையில் உயர் போலீஸ் அதிகாரி முன்னிலையில் சரணடைந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், காரமடையை சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் அவரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காரமடையை சேர்ந்த கான்ட்ராக்டர் ரவிக்குமார், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். ராவணன், தன்னை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக புகாரில் கூறியுள்ளார். இதுதொடர்பாக ராவணன் மீது கொலை மிரட்டல், பணம் பறிப்பு ஆகிய பிரிவுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவையில் தங்கியிருந்த ராவணனை இன்று கைது செய்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் விசாரணை

ராவணன் காரமடையை சேர்ந்த கான்ட்ராக்டர் ரவிக்குமார், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்தார். ராவணன், தன்னை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக புகாரில் கூறியுள்ளார். இதுதொடர்பாக ராவணன் மீது கொலை மிரட்டல், பணம் பறிப்பு ஆகிய பிரிவுகளில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோவையில் தங்கியிருந்த ராவணனை இன்று கைது செய்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராவணன் மீது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசில் அளிக்கப்படும் புகார்கள் தொடர்பாகவும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராவணன், சசிகலாவின் சித்தப்பா மகளை திருமணம் செய்தவர். வேளாண் பல்கலை.யில் எம்.எஸ்சி., படித்தவர். கோவை ராமநாதபுரத்தில் வசித்து வருகிறார். அதிமுகவில் அதிகார மையமாக செயல்பட்டு வந்த ராவணன், திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

pasamவெள்ளி 27, ஜனவரி 2012 - 06:05:37 PM | Posted IP 117.2*****

விசாரணை அறிகையை வெளி இடனும் காழ்புணர்ச்சி காரணமாக செய்யகூடாது அம்மாவின் அசைக்க முடியாத கொள்கை படி உப்பு திண்டிருந்தால் தண்ணி குடிக்கணும்

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory