» செய்திகள் » தமிழகம்
தோற்றது திமுக அல்ல... வாக்காளர்கள்தான்!! மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் கருணாநிதி பேச்சு
வியாழன் 26, ஜனவரி 2012 5:48:57 PM (IST)
தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வர அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து பாடு பட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் அருகில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசியதாவது: ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். இதனை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
தேர்தலில் தோற்றுப்போன கட்சியா என்ற தோற்றத்தையே மறைக்கும் வகையில் மக்கள் என்றைக்கும் என் பக்கம் என்று, இந்த கூட்டத்தை பார்த்து பூரிப்பு அடைகிறேன். ஏராளமான தியாக உள்ளங்கள், நம்முடைய தமிழ் தலை நிமிர உயிர் நீத்தார்கள். இவர்களால் தலைக்கு வந்த ஆபத்து நீங்கி விட்டது.
தமிழுக்காக அவர்கள் உயிரையும், மூச்சையும் இழந்ததால் பின்னுக்கு தள்ளப்பட்டது இந்தி மொழி. 1938ம் ஆண்டு 14 வயது பள்ளி மாணவனாக, நான் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். இன்றைக்கு எனக்கு வயது 84. ஆகவே, தமிழ் மொழிக்காக 74 ஆண்டுகள், நான் போராடி வருகிறேன். பெரியார் வழியில் அண்ணா கை பிடித்து போராடினேன்.
அந்த போராட்டங்கள் நடந்து முடிந்து விட்டது. இன்றைக்கும் இந்தி மொழி ஆதிக்கம் வேண்டுமா? என்ற விவாதம் எழுந்த போது சிறைப்பட்டோம், சித்ரவதை பட்டோம். மொழி போருக்காக போராடிய ஒரே கட்சி திமுக என்று, இங்கு சிலர் பேசினார்கள். ஆனால், எல்லா கட்சிகளும் உரிமை எடுத்து கொண்டு ஒன்று சேர்ந்து போராட வேண்டும். அண்ணா வழியில் வந்தவர்கள் என்ற உணர்வுகளோடு, முல்லை பெரியாறு பிரச்னையில் மொத்த தமிழகமும் போராடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
இந்தியாவில் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக கொண்டு வர வேண்டும். இந்தியை மற்ற மாநிலங்களில் ஆட்சி மொழியாக கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. இதனை கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஏற்று கொள்வார்களா என்று பொருத்திருந்து பார்ப்போம். திமுகவின் நோக்கம், மூத்த மொழியான தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். அதற்காக அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தில் பாடுபட வேண்டும்.
திராவிடம் என்ற சொல்லை தற்போது ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். திராவிடம் என்பது கலாசாரம், இனம், பண்பாடுகளை கொண்டது. திராவிடர்கள், இந்த நாட்டின் பூர்வீக குடிமக்கள். ஆரியர்கள் வருவதற்கு முன்பே, இங்கு வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். திராவிடம் என்று நீயும், நானும் ஏற்படுத்தியது அல்ல. நம்முடைய முப்பாட்டன் கண்டுபிடித்த இனத்தின் பெயரை, நாம் பெற்றுள்ளோம்.
பேரறிஞர் அண்ணாவே திராவிட நாடு என்ற கைப்பட புத்தகம் எழுதியுள்ளார். அதில், அவர் திராவிட நாடு என்ற கொள்கையை கைவிடவில்லை. திராவிடம் என்பது கற்பனை அல்ல. ஒரு இனத்தின் தாகம், எழுச்சி, மானத்தை உரமாக கொள்கின்ற லட்சியத்தின் அடித்தளம் திராவிடம். ஆகவே, நாம் யாரையும் நம்பி ஏமாந்து விட வேண்டாம்.
தேர்தலுக்கு முன்பு, இந்த எழுச்சி இல்லை. இப்போது, இந்த கூட்டத்தை பார்க்கும் போது, மிக எழுச்சியை காண்கிறேன். எப்படி வந்தது, இந்த எழுச்சி. அடிபட்டால் தான் தெரியும் என்று நீங்கள் சொல்லாமல் சொல்லும் எழுச்சி இது. அறிஞர் அண்ணா, ஒரு முறை தேர்தலின் போது வாக்குகளை சேகரிக்க சென்றார். அப்போது பலர் முகத்தை திருப்பி கொண்டு சென்றார்கள்.
அண்ணா அடுத்த முறை முதல்வரானதும், சென்னை ராஜ்ஜியம் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். அதே அண்ணா தமிழ்நாட்டில் இந்தி மொழி கட்டாயம் இல்லை. தமிழ்நாட்டில் தமிழ் மொழி மட்டும் தான் ஆட்சி மொழி என்று முழங்கினார். தோல்வி என்பது திமுகவிற்கு இல்லை. உங்களுக்கு தான்.
இப்போது தான் உங்களுக்கு தோல்வியின் கணம் தெரிகிறது. தோற்றது கழகம் அல்ல. தோற்றது வாக்காளர்கள் தான். ஆகவே, எதிர்காலத்தில் மன உறுதியோடு, எதிர்கால தலைமுறையை காக்கும் வகையில், தமிழர்கள் பகுத்தறிவோடு, அண்ணாவின் தம்பிகளாக, கழகத்தின் உடன் பிறப்புகளாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, இளைஞர் அணி அமைப்பாளர் விஸ்வநாதன், காஞ்சிபுரம் திருவள்ளூர் வேளாண் விற்பனை குழு முன்னாள் தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
vekamவெள்ளி 27, ஜனவரி 2012 - 06:13:32 PM | Posted IP 117.2*****
பெருசுக்கு பழங்கதை பேசியே நேரம் ஒளிஞ்சிடும் தமிழ் பெயரால் எல்லா கலாசார சீரழிவையும் ஏற்படுத்தியதே இவன் குடும்பம் தான் சன் டிவி இவரு பேர பிள்ளைகள் எடுத்த சினிமா இவரு கட்சி குடும்பம் பண்ணிய ஊழல் இவரு மகன் மதுரை சண்டித்தனம் இதெல்லாம் தமிழின் பெருமை அல்லாமல் வேறன்ன ?
தமிழன்வெள்ளி 27, ஜனவரி 2012 - 01:26:01 PM | Posted IP 122.1*****
தமிழனாக இருப்போம் . அதுக்காக மத்த மொழிகள் தெரியாமல் இருக்க கூடாது . இந்திய அரசில் (மத்திய ) வேலை கிடைத்தால் அதுவும் டெல்லியில் கிடைத்தால் தமிழை மட்டும் வைத்து காலம் தள்ள முடியாது
Raja Gopal.வெள்ளி 27, ஜனவரி 2012 - 12:32:31 AM | Posted IP 141.0*****
Hindi padiththal nanmai undu!
makkalவியாழன் 26, ஜனவரி 2012 - 06:58:48 PM | Posted IP 122.1*****
enga குடும்பம் மட்டும் ஹிந்தி அண்ட் ஆங்கிலம் படித்து அறிவாலிய இருப்போம் மக்களே நீங்க தமிழ் மட்டும் படித்து முட்டல்கலவே இருங்க அப்பம் தான் நாங்க நாட்டை கொள்ளை அடிக்க முடியும்
மேலும் தொடரும் செய்திகள்

ஏட்டிக்கு போட்டி : கூடன்குளத்தில் உண்ணாவிரதம் ... நாகர்கோவிலில் உண்ணும் விரதம்
புதன் 22, பிப்ரவரி 2012 6:26:37 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட சர்ச்சுகளில் இன்று சிறப்பு பிரார்த்தனை
புதன் 22, பிப்ரவரி 2012 6:06:06 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்க ஒத்துழைப்பு: போராட்ட குழுவினருக்கு சரத்குமார் வேண்டுகோள்
புதன் 22, பிப்ரவரி 2012 5:22:13 PM (IST)

போட்டியிட மனுவை தாக்கல் செய்து டெபாசிட் தொகையை கட்டாத வேட்பாளர்
புதன் 22, பிப்ரவரி 2012 5:20:51 PM (IST)

கைது நடவடிக்கையின் போது நடராஜனுடன் இருந்த அதிமுகவினர் நீக்கம் : முதல்வர் ஜெ அதிரடி
புதன் 22, பிப்ரவரி 2012 4:22:58 PM (IST)

துணை நடிகைகளை வைத்து பாலியல் தொழில்: பிரபல நடிகை கைது - பொறிவைத்து பிடித்த போலீஸ்!!
புதன் 22, பிப்ரவரி 2012 4:15:38 PM (IST)



Vivekamவெள்ளி 27, ஜனவரி 2012 - 06:18:35 PM | Posted IP 117.2*****