» செய்திகள் » தமிழகம்

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 42 பேர் கைது: இலங்கை தொடர் அட்டூழியம்

புதன் 25, ஜனவரி 2012 5:05:02 PM (IST)

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 42 பேரை இலங்கை ராணுவம் அத்துமீறி கைது செய்தது. இதனால் நாகையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த காளியப்பன், சங்கர், ரமேஷ், வேல்முருகன், சசிக்குமார், மோகன், சின்னப்பன், தமிழ்செல்வன், பாலச்சந்தர், முருகானந்தம், கனகராஜ், வேலாயுதம், முருகன் உள்பட 42 மீனவர்கள் கடந்த 22ம் தேதி 6 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் இன்று காலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அத்துமீறி வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை வாய்க்கு வந்தபடி திட்டியுள்ளனர். இதையடுத்து மீனவர்கள் படகை திருப்பி கொண்டு கரைக்கு புறப்பட தயாரானார்கள்.

அப்போது இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டனர். பின்னர் 6 படகுகளுடன் 42 மீனவர்களையும் கைது செய்து, திரிகோணமலைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்தபடியே மீனவர்கள் அக்கரைப்பேட்டையில் உள்ள மீனவ பஞ்சாயத்தாருக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதுபற்றி மாவட்ட நிர்வாகத்துக்கும், மீன்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து அக்கரைப்பேட்டை மீனவர்கள் கூறுகையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயம் குறித்து ராஜபக்சேவிடம் பேசிவிட்டதாகவும், இனிமேல் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் இருக்காது என்றும் கூறியிருந்தார். ஆனாலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி விட்டது.இவ்விஷயத்தில் நிரந்தர தீர்வு காண மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


மக்கள் கருத்து

Tamilanசனி 28, ஜனவரி 2012 - 02:22:30 PM | Posted IP 141.0*****

Ulagilayae brain powerla 1st place Tamilan. Man powerlayum kaatanum.na adharkum tayaar.

தமிழன்வியாழன் 26, ஜனவரி 2012 - 12:09:33 PM | Posted IP 122.1*****

சுனாமி வந்து இலங்கை அழியணும் .மத்திய அரசு வேஸ்ட் .வைகோ இதற்கு ஒரு முடிவு காட்டுவார் என காத்திருக்கும் ஒரு தமிழன்

baskerவியாழன் 26, ஜனவரி 2012 - 09:58:45 AM | Posted IP 122.1*****

இமய மலையில் எல்லை பாதுகாப்பு கொடுக்கும் மத்திய காங்கிரஸ் ஆட்சி குமரி முனையில் ஏன் இப்படி அலட்சிய போக்கு காட்டுகிறது ...?

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads












Thoothukudi Business Directory