» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
த.வெ.க., ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு: 15 ஆண்டு கால திமுக கூட்டணி முறிவு!
புதன் 6, மே 2026 12:43:52 PM (IST)

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக கடந்த 15 ஆண்டுகளாக இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வருகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக (தனிப்பெரும்பான்மை இன்றி) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. சில கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்க வேண்டும் என விஜய் தன்னிடம் கேட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் கமிட்டியே முடிவு செய்யலாம் என்றும் கூறினார்.
இதனிடையே நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து முடிவு செய்ய சென்னையில் இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்பின்னர் தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதாக காங்கிரஸ் தேசிய தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது. மதவாத சக்திகளுடன் சேரக்கூடாது என்ற நிபந்தனையுடன் தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது.
தவெக ஆட்சி அமைக்க மட்டுமல்லாமல், உள்ளாட்சித் தேர்தல், லோக்சபா தேர்தல் மற்றும் ராஜ்ய சபா தேர்தலிலும் காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கடந்த 15 ஆண்டுகளாக இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வருகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வழங்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறை, மேலூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு : ஆதரவு வாக்குகள் 144 - திமுக வெளிநடப்பு!
புதன் 13, மே 2026 11:52:09 AM (IST)

சட்டமன்றத்தில் எதிரொலித்த ஜோதிடர் விவகாரம்: கடும் அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்!
புதன் 13, மே 2026 10:56:18 AM (IST)

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம்: காங்கிரஸ், அதிமுக அதிருப்தி குழு ஆதரவு!
புதன் 13, மே 2026 10:18:25 AM (IST)

காதர் மொய்தீன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் விஜய் சந்திப்பு
புதன் 13, மே 2026 8:34:14 AM (IST)

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் : நிதித்துறை செயலாளராக சித்திக் நியமனம்!
செவ்வாய் 12, மே 2026 5:50:25 PM (IST)

விஜய்க்கு சி.வி. சண்முகம் அணியினர் ஆதரவு : அதிமுகவில் பிளவு - கட்சித்தலைமை கண்டனம்!
செவ்வாய் 12, மே 2026 5:23:54 PM (IST)











தமிழன்மே 6, 2026 - 07:15:18 PM | Posted IP 172.7*****