» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நிற்போம்: விஜய் தலைமையிலான அரசுக்கு சீமான் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 4:44:59 PM (IST)
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அமையவுள்ள புதிய அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை மறுநாள் தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சீமான் அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாகச் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றிபெற்ற அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகப் புதிய அரசுக்கும் எனது வாழ்த்துகள்
மேலும், தமிழர்களின் நலனுக்காகவும், தாய்நிலத்தின் உயர்வுக்காகவும் நாம் தமிழர் கட்சி தொடர்ச்சியாகக் களப்பணியாற்றும் என்றும், மண்ணுக்கும் மக்களுக்குமான ஆக்கப்பூர்வமான மாற்று அரசியலைப் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நின்று முன்னெடுப்போம் என்றும் சீமான் தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! - முதல்வர் விஜய் பேச்சு!
புதன் 13, மே 2026 12:08:15 PM (IST)

பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு : ஆதரவு வாக்குகள் 144 - திமுக வெளிநடப்பு!
புதன் 13, மே 2026 11:52:09 AM (IST)

சட்டமன்றத்தில் எதிரொலித்த ஜோதிடர் விவகாரம்: கடும் அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்!
புதன் 13, மே 2026 10:56:18 AM (IST)

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம்: காங்கிரஸ், அதிமுக அதிருப்தி குழு ஆதரவு!
புதன் 13, மே 2026 10:18:25 AM (IST)

காதர் மொய்தீன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் விஜய் சந்திப்பு
புதன் 13, மே 2026 8:34:14 AM (IST)

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் : நிதித்துறை செயலாளராக சித்திக் நியமனம்!
செவ்வாய் 12, மே 2026 5:50:25 PM (IST)











Sivasriமே 5, 2026 - 05:08:33 PM | Posted IP 172.7*****