» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து விஜய் மேல்முறையீடு
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:52:43 PM (IST)

வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது செல்லும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய்,சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளார்.
விஜய் நடித்த புலி படம், கடந்த 2015ல் வெளியானது. அதே ஆண்டு, செப்., 30ல் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, புலி படத்தில் நடித்ததற்காக சம்பளமாக 16 கோடி ரூபாயை காசோலையாகவும், கூடுதலாக, 15 கோடி ரூபாயை பணமாகவும் பெற்றது தெரியவந்தது. இவற்றில் கூடுதல் தொகையான 15 கோடி ரூபாயை, விஜய் கணக்கில் காட்டாதது கண்டறியப்பட்டது. 15 கோடி ரூபாய் கூடு தல் வருமானத்தை மறைத்ததற்காக, 1.5 கோடி ரூபாய் அபராதம் விதித்து, வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், விஜய் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி 'விஜய்க்கு அபராதம் விதித்து, உரிய கால அவகாசத்துக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை அபராதம் விதித்த உத்தரவில், எந்த சட்டவிரோதமும் இல்லை. நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை' என கூறி, விஜய் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அனுமதி அளித்து இருந்தார். இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் தனது மனுவில், தனது தரப்பு கருத்தை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் சிக்கல்கள் உள்ளன. வருமானவரித்துறை, தனது வருமானத்தை புலி படத்தை பிறகு உள்ள வருமானத்தையும் குறிப்பிட்டு சேர்த்துள்ளனர். ஆனால், கால அவகாசம் வெவ்வேறாக உள்ளன. இந்த விவகாரத்தில் நிறைய சிக்கல்கள் உள்ளன. வேண்டுமென்றே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புஷ்பா பட பாணியில் சோபா ஆட்சி: முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!
புதன் 13, மே 2026 12:20:56 PM (IST)

குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! - முதல்வர் விஜய் பேச்சு!
புதன் 13, மே 2026 12:08:15 PM (IST)

பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு : ஆதரவு வாக்குகள் 144 - திமுக வெளிநடப்பு!
புதன் 13, மே 2026 11:52:09 AM (IST)

சட்டமன்றத்தில் எதிரொலித்த ஜோதிடர் விவகாரம்: கடும் அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்!
புதன் 13, மே 2026 10:56:18 AM (IST)

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம்: காங்கிரஸ், அதிமுக அதிருப்தி குழு ஆதரவு!
புதன் 13, மே 2026 10:18:25 AM (IST)

காதர் மொய்தீன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் விஜய் சந்திப்பு
புதன் 13, மே 2026 8:34:14 AM (IST)










