» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழர் வாழ்வில் அமைதி, வளம் பெருகட்டும்: சரத்குமார் புத்தாண்டு வாழ்த்து!
திங்கள் 13, ஏப்ரல் 2026 5:05:54 PM (IST)
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் சரத்குமார் தனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழ் ஆண்டின் விசுவாவசு மறைந்து, புதிய ஆண்டான பராபவ ஆண்டு தமிழர்கள் வாழ்வில் புதிய நம்பிக்கைகள், புதிய சாதனைகள் மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்கும் ஒரு புதிய தொடக்கமாக அமையட்டும்.
தமிழர் பாரம்பரியம், பண்பாடு மற்றும் ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும் இந்த இனிய நாளில், மக்கள் வாழ்வில் அமைதி, ஆரோக்கியம் மற்றும் வளம் பெருகிட மனமார வாழ்த்துகிறேன்.
நல்லாட்சி அமைந்து நமது தமிழ்நாட்டில் தொடர்ந்து வரும் கொலை, கொள்ளை, ஊழல், கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, வளமான வருங்காலம் அமைய ஒன்றிணைந்து செயல்படுவோம். இளம் தலைமுறையின் கனவுகள் நனவாக, விவசாயிகள் வளமாக, தொழிலாளர்கள் நலமாக வாழும் ஒரு தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
இந்த புத்தாண்டில், இல்லங்கள் தோறும் மகிழ்ச்சியும், உள்ளங்கள் தோறும் நம்பிக்கையும், உத்வேகமும் மலரட்டும். நல்ல முயற்சிக்கான வெற்றி கிடைக்கட்டும். அனைத்து தமிழ் சகோதர, சகோதரிகளுக்கும் என் சார்பாகவும், என் குடும்பத்தின் சார்பாகவும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகவும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்றத்தில் எதிரொலித்த ஜோதிடர் விவகாரம்: கடும் அதிருப்தியில் கூட்டணிக் கட்சிகள்!
புதன் 13, மே 2026 10:56:18 AM (IST)

தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம்: காங்கிரஸ், அதிமுக அதிருப்தி குழு ஆதரவு!
புதன் 13, மே 2026 10:18:25 AM (IST)

காதர் மொய்தீன், திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் விஜய் சந்திப்பு
புதன் 13, மே 2026 8:34:14 AM (IST)

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் : நிதித்துறை செயலாளராக சித்திக் நியமனம்!
செவ்வாய் 12, மே 2026 5:50:25 PM (IST)

விஜய்க்கு சி.வி. சண்முகம் அணியினர் ஆதரவு : அதிமுகவில் பிளவு - கட்சித்தலைமை கண்டனம்!
செவ்வாய் 12, மே 2026 5:23:54 PM (IST)

முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு: காமராஜ் எம்.எல்.ஏ. அ.ம.மு.க.-வில் இருந்து நீக்கம்!
செவ்வாய் 12, மே 2026 4:18:38 PM (IST)










