» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை: அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ அறிக்கை தாக்கல்!
புதன் 4, பிப்ரவரி 2026 3:35:51 PM (IST)
திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில், நகை திருட்டுப் புகாரில் உண்மை இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்தவர் அஜித்குமார். இவரை கடந்த ஆண்டு ஜூன் 27-ம் தேதி நகை காணாமல் போனது தொடர்பாக நிகிதா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் விசாரித்தனர். அதில் கடுமையாக தாக்கப்பட்ட அஜித்குமார் ஜூன் 28-ம் தேதி உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் 5 தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில், 2 பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வாதத்தில், "அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. டிஎஸ்பி, காவல் ஆய்வாளர், தலைமை காவலர், தனிப்படை காவலர்கள் என 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, குறிக்கிட்ட நீதிபதி, நகை திருட்டுப் புகார் என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு வழக்கறிஞர், "அது உண்மை இல்லை என்பதால், புகார் முடிக்கப்பட்டு விட்டது. அது தொடர்பான அறிக்கை தயாராகி வருகிறது. விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து நீதிபதி, "ஒன்றுமே இல்லாத வழக்கிற்கு ஒருவரை அடித்து கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே?. அவர் தானே எல்லாவற்றிற்கும் காரணம்?. ஒரு நபரை இத்தனை பேர் சேர்ந்து தாக்குவதற்கு என்ன காரணம்? முன் விரோதம் ஏதும் இருந்ததா? என அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார்.
முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு விசாரித்துள்ளனர்.” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், "இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்தவர்கள், பிரபு என்ற போலீஸ்காரரைத் தவிர மற்றவர்கள் அடித்ததாகவே கூறியிருக்கின்றனர். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதி, "வழக்கு முடியும் வரை யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனம் பதறுகிறது. ஏதுமில்லாத விசயத்துக்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல் துறையினருக்கு பாடம் புகட்டுவோம்.” என குறிப்பிட்டு விசாரணையை பிப்.17-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் பங்கேற்ற த.வெ.க. மாநாட்டில் துயரம் : கூட்டத்தில் மயங்கி விழுந்த நபர் உயிரிழப்பு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:46:26 PM (IST)

டிஆர்பி தேர்வில் வெற்றிபெற்ற 35 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணைகள்: அமைச்சர் வழங்கல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:27:08 PM (IST)

திமுகவை பொறுத்தவரை தேர்தல் வெற்றிக்கு மட்டுமே கூட்டணி : விஜய் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:18:51 PM (IST)

பிரச்சினையை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாதவர் விஜய் : எடப்பாடி பழனிசாமி சாடல்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 5:02:27 PM (IST)

சிவாலய ஓட்டம்: கனிமவள லாரிகளுக்கு 2 நாட்கள் தடை - எஸ்பி ஸ்டாலின் உத்தரவு!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:38:17 PM (IST)

தோல்வி பயத்தால் திமுக அரசு ரூ.5000 கொடுத்துள்ளது: ஜெயக்குமார் விமர்சனம்!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 12:15:17 PM (IST)










