» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கொடுமுடியாறு அணையில் நவ.10ம் முதல் தண்ணீர் திறப்பு : தமிழக அரசு ஆணை!
வெள்ளி 7, நவம்பர் 2025 5:53:55 PM (IST)

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் 10ம் தேதி முதல் 31ம் தேதி வரை வினாடிக்கு 100 க.அடி அளவுக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், கொடுமுடியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து 10.11.2025 முதல் 31.03.2026 வரை 142 நாட்களுக்கு நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தைப் பொறுத்து வினாடிக்கு 100 க.அடி அளவுக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது.
இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டம், நாங்குனேரி மற்றும் ராதாபுரம் வட்டங்களில் உள்ள மகிழடி, நம்பித்தலைவன் பட்டயம் ஏர்வாடி, ராஜாக்கள்மங்கலம், வள்ளியூர், தளபதிசமுத்திரம், அச்சம்பாடு, கள்ளிகுளம் ஆகிய பாசன பரப்புகளில் உள்ள 5780.91 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புதுச்சேரியில் டிச.9-ல் விஜய் பொதுக் கூட்டம்: 5,000 பேரை மட்டுமே அனுமதிக்க நிபந்தனை
சனி 6, டிசம்பர் 2025 4:48:55 PM (IST)

குமரி மாவட்டத்தில் அம்பேத்கர் நினைவு நாள்: ரூ.14.11 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!
சனி 6, டிசம்பர் 2025 4:11:06 PM (IST)

கன்னியாகுமரி புதிய பேராயராக கிறிஸ்டோபர் விஜயன் தேர்வு: நாளை பதவியேற்பு விழா
சனி 6, டிசம்பர் 2025 3:51:18 PM (IST)

சேதமடைந்த பாதாள சாக்கடை மூடியால் விபத்து அபாயம்: உடனடியாக சீரமைக்க கோரிக்கை!
சனி 6, டிசம்பர் 2025 3:09:50 PM (IST)

தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு : வானிலை ஆய்வாளர் கணிப்பு!
சனி 6, டிசம்பர் 2025 11:51:16 AM (IST)

இண்டிகோ விமான சேவை ரத்து: பெங்களூரு-சென்னை இடையே சிறப்பு ரயில்கள்
சனி 6, டிசம்பர் 2025 11:45:19 AM (IST)










