» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரூர் சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை: 2-வது முறையாக புஸ்சி ஆனந்த் மனு தாக்கல்!
சனி 11, அக்டோபர் 2025 12:24:51 PM (IST)
கரூர் சம்பவத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் 2-வது முறையாக புஸ்சி ஆனந்த் மனு தாக்கல் செய்தார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.இந்த வழக்கில் ஏற்கனவே மதியழகன் உள்பட 2 பேர் கைதாகி உள்ளனர். இதனால் புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கும்படி கேட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் 2-வது முறையாக புஸ்சி ஆனந்த், தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், கரூரில் எங்கள் கட்சி கூட்டத்தின்போது போலீசாரின் அலட்சியம்தான் பலர் இறப்பதற்கு காரணம். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாலும், விசாரணை தொடக்க கட்டத்தில் இருப்பதையும் கருத்தில் கொண்டு ஏற்கனவே என்னுடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது.
ஆனால் இப்போது அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட யாரும் சிகிச்சையில் இல்லை. மேலும் இந்த சம்பவத்தை பொறுத்தவரை எனக்கு எந்த தொடர்பும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன். எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு மதுரை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் முறைகேடு போராட்டம்: சோனம் வாங்சுக்குடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த சீமான் கோரிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 4:53:33 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து: நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
வெள்ளி 17, ஜூலை 2026 3:27:42 PM (IST)








