» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளர் விஜய்: செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்

வெள்ளி 4, ஜூலை 2025 5:06:04 PM (IST)



தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்வர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பனைவூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடந்தது. இதில், செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரத்தை விஜய்க்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாட்டை நடத்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. திருச்சி அல்லது மதுரையில் 2வது மாநில மாநாட்டை நடத்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.செப்டம்பர் முதல் டிசம்பவர் வரை விஜய் மக்கள் சந்திக்கிறார். த.வெ.க.,விற்கு எதிராக கபட நாடகம் ஆடும் தி.மு.க., அரசின் அராஜக போக்கிற்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கச்சத்தீவை குத்தகைக்கு கேட்டு பெற வேண்டும், மாநில சுயாட்சி, சட்டம் ஒழுங்கை காக்க தவறிய தமிழக உள்துறை அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. த.வெ.க., முதல்வர் வேட்பாளராக விஜயை தேர்வு செய்து செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. த.வெ.க., அறிவிப்பால், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மும்முனை போட்டி உறுதி ஆகி உள்ளது.

த.வெ.க., செயற்குழு கூட்டத்தில் விஜய் பேசியதாவது: கொள்ளை எதிரிகள், பிளவுவாத சக்திகள் உடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூட்டணி இல்லை. மலிவான அரசியல் ஆதாயத்திற்கு மக்களை பிளவுபடுத்தி குளிர்காய பா.ஜ., நினைக்கிறது. அவர்களின் இந்த விஷமதனமான வேலைகள் எங்கு வேண்டுமானாலும் எடுபடலாம். ஆனால் தமிழகத்தில் ஒரு போதும் எடுபடாது.

சமூக நீதியும், சகோரத்துவமும் ஆழமான வேரூன்றிய மண் தமிழகம். தமிழகத்தின் மதிப்பிற்குரிய தலைவர்களை வைத்து பா.ஜ., அரசியல் செய்தால் ஒருபோதும் வெற்றி பெற இயலாது. சுயநல அரசியல நலனுக்காக கூடி குழைந்து கூட்டணி போக தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ இல்லை த.வெ.க.,

கூட்டணி என்றாலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் அமையும். தி.மு.க., மற்றும் பா.ஜ.,விற்கு எதிராக கூட்டணி இருக்கும். அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதையும் உறுதிபட செயற்குழு வாயிலாக தெரிவிக்க விரும்புகிறேன். இது இறுதியான தீர்மானம் மட்டுமல்ல. உறுதியான தீர்மானம்.

நமது விவசாயிகளுக்காக நாம் உறுதியாக நிற்க வேண்டியது நமது கடமை. நாம் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம். பரந்தூர் மக்களை ஏன் சந்திக்கவில்லை என்றால் முதல்வர் ஸ்டாலினிடம் பதில் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்தால் மட்டும் தான் மக்கள் பற்றி அக்கறை இருக்குமா? பரந்தூர் மக்களை முதல்வர் ஸ்டாலின் சந்திக்க வேண்டும்.

நூற்றுக்கணக்கான விவசாய நிலங்களை அழித்து விட்டு, மிக பெரிய நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை அழித்து விட்டு, அந்த இடத்தில் தான் விமான நிலையம் கட்டி ஆக வேண்டும் என்று என்ன அவசியம் இருக்கிறது. நீங்கள் ஏன் மக்களின் முதல்வர் என்று நாகூசாமல் சொல்கிறீங்க. உங்களுக்கும், பரந்தூர் விமான நிலையத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறீர்கள். 1500 குடும்பங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு சாதாரணமாக தெரிகிறதா? இவ்வாறு விஜய் பேசினார்.


மக்கள் கருத்து

SOORIYANJul 5, 2025 - 08:31:21 AM | Posted IP 172.7*****

கம்யூனிஸ்ட் /வைகோ / திருமா இவருடன் சேர்ந்து கூட்டணி அமைப்பார்கள், பிறகு விஜய் காணாமல் போயிடுவார். விஜயகாந்த் போல இவரை கவிழ்த்து விடுவார்கள், விஜய்காந்த் நல்ல மனிதர் அதனால் அவர் பெயரால் கட்சி சிறப்பாக உள்ளது. ஆனால் விஜய் சுய நலவாதி மிஷனரி. இவரால் பனையூர்க்கு கூட முதல்வர் ஆக முடியாது, தகுதியற்றவர்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors

CSC Computer Education




Thoothukudi Business Directory