» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் தோனி: முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து!!
செவ்வாய் 10, ஜூன் 2025 5:24:10 PM (IST)

ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஐசிசி-யின் பெருமைமிகு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ வரிசையில் சேர்க்கப்பட்டதற்காக மகேந்திர சிங் தோனிக்கு என் வாழ்த்துகள். ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையில் இந்தியாவுக்குத் தலைமை தாங்கியது தொடங்கி, அதிக ஸ்டம்பிங் செய்தவர் என்ற சாதனை படைத்து, அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்பது முதல் சென்னை அணியை 5 முறை ஐபிஎல் கோப்பையையும், இருமுறை சாம்பியன்ஸ் லீக் தொடரிலும் வெற்றிபெறச் செய்தது வரை நீங்கள் உயர்சிறப்பான கிரிக்கெட் மரபைக் கட்டியெழுப்பியுள்ளீர்கள்.
உங்களின் நிதானத்தால் தலைமைத்துவத்தின் வரையறையையே மாற்றியமைத்தீர்கள். விக்கெட்கீப்பிங் என்பதை ஒரு கலைநேர்த்தியாக மாற்றிக் காட்டினீர்கள். ஒரு தலைமுறையையே உங்களது தெளிவாலும் உறுதியாலும் ஊக்குவித்துள்ளீர்கள். உங்களது பயணம் கிரிக்கெட் வரலாற்றில் தற்போது பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே 'Thala For a Reason' என்ற புகழுரை ஓயாது,” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற எம்.எஸ்.தோனிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தோனியின் தலைமை பண்பு, விளையாடும் விதம் பல கோடி கிரிக்கெட் பிரியர்களை ஊக்கப்படுத்தி உள்ளது. இந்திய அணியின் வீரராகவும், கேப்டனாகவும் உங்கள் பயணம் விளையாட்டின் வரலாற்றில் பொறிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:10:16 PM (IST)

தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் - ஸ்டாலின்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:44:49 PM (IST)

அதிமுகவுக்கு ஆதரவு : தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் இபிஎஸ் உடன் சந்திப்பு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:21:04 PM (IST)

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:28:42 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுமார் 11.92 இலட்சம் பேருக்கு வாக்காளர் தகவல் சீட்டு வழங்கல் : ஆட்சியர் தகவல்
வெள்ளி 17, ஏப்ரல் 2026 11:34:10 AM (IST)

நாகர்கோவில் குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: பாஜக வேட்பாளர் எம்.ஆர். காந்தி வாக்குறுதி!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:56:27 AM (IST)





