» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: அமைச்சர் ஆய்வு!

திங்கள் 19, மே 2025 4:03:34 PM (IST)



தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணியினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோவானை மலர் வணிக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேற்கூடாரத்தினை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் இன்று (19.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்திற்குகென பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை அறிவித்து, நிதி ஒதுக்கீடு செய்து முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்கள்.

அதன்ஒருபகுதியாக தமிழ்நாட்டிலேயே மிகவும் பிரசித்திப்பெற்ற தோவாளை மலர் சந்தையினை மேம்படுத்தும் வகையிலும், மலர்கள் விற்பனை செய்பவர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையிலும், பாதுகாப்பு தன்மையுடன் மலர்களை விற்பனை செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரிய நிதியின் கீழ் ரூ.2.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மலர் சந்தைக்கு வரும் வியாபாரிகள், நுகர்வோர்களின் வசதிக்காக மழை மற்றும் வெயில் காலங்களில் மலர் வணிகம் தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு இந்த மேற்கூரை மிகவும் அவசியம். மேற்கூரை அமைப்பதன் வாயிலாக மலர்கள் வீணாகாமல், பாதுகாக்கப்படுவதோடு, மழைக்காலங்களில் சேறு சகதிகளிலிருந்து வியாபாரிகளையும், நுகர்வோர்களையும் பாதுகாக்கும்.

எனவே இந்த மேற்கூரை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து, மலர் விற்பனையாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து தோவாளை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் கீழ் தோவாளை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பாலகத்தினை திறந்து வைத்தார்கள்.

நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் என்.சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆவின் பொது மேலாளர் மகேஷ்வரி, துணை பதிவாளர் சைமன் சார்லஸ், ஆவின் மேலாளர் ஷீபா அலெக்ஸ், கேட்சன், பூதலிங்கம், பிராங்கிளின், நெடுஞ்செழியன், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital


CSC Computer Education



Thoothukudi Business Directory