» செய்திகள் » தமிழகம்
தேர்தல் விதிமுறை அனைவருக்கும் பொருந்தும்: பாமகவுக்கு அமைச்சர் வேலு அறிவுரை!
புதன் 10, மார்ச் 2010 10:22:07 AM (IST)
பென்னாகரத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வாகனத்தை போலீசார் நேற்று முன்தினம் சோதனையிட்ட போது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பா.ம.க.,வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அதே சோதனைச் சாவடியில், உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வாகனத்தையும் போலீசார் நேற்று தீவிரமாக சோதனையிட்டனர். பின்னர் செய்தியார்களிடம் பேசிய அமைச்சர் வேலு,
தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, அனைத்து காவல் சோதனைச் சாவடிகளிலும், அனைத்து வாகனங்களையும் போலீசார் சோதனை செய்கின்றனர். அதுபோல தான் எனது வாகனத்தையும் சோதனை செய்தனர். அமைச்சராக இருந்தாலும், எம்.பி., எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், கட்சிகளின் தலைவர்களாக இருந்தாலும் அனைவரும் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
அவர்கள் கடமையைச் செய்கின்றனர். இதில், எதிர்ப்போ, கருத்தோ தெரிவிக்க ஒன்றுமில்லை. ஆனால், ராமதாஸ் வாகனத்தை போலீசார் சோதனை செய்ய முயன்றபோது, அவர் உடன் வந்தவர்கள், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து, அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்; சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகைய செயல்பாடுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டதே. தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே, இத்தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து, தொகுதிக்கு உள்ளே வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டுமென, தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது என்று வேலு கூறினார்.
மேலும் தொடரும் செய்திகள்
நெல்லை தொழில்நுட்ப பூங்கா நவம்பரில் செயல்படும்: அமைச்சர் பூங்கோதை
எம்.செல்வா | வியாழன் 29, ஜூலை 2010 5:50:56 PM (IST)

ஹார்லிக்ஸ் பாட்டில்கள் திருட்டு: அழகிரி மீது ஜெயலலிதா சந்தேகம்
வியாழன் 29, ஜூலை 2010 4:37:19 PM (IST)

தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் மகள் மாலா மரணம்-கருணாநிதி இரங்கல்
வியாழன் 29, ஜூலை 2010 3:49:49 PM (IST)

பாஸ்போர்ட் கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட் வழங்க லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது
வியாழன் 29, ஜூலை 2010 11:59:08 AM (IST)

அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு நூலகப் பணியாளர் தேர்வு விண்ணப்பம் விநியோகம்
வியாழன் 29, ஜூலை 2010 11:21:39 AM (IST)

நடுக்கடலில் 4 நாட்களாக உயிருக்கு போராடிய 5 இலங்கை மீனவர்கள் மீட்பு
ஸ்ரீ | புதன் 28, ஜூலை 2010 10:27:40 PM (IST)
மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற பி.சி., எம்.பி.சி. மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசு
புதன் 28, ஜூலை 2010 4:21:05 PM (IST)

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்று மாலை திறப்பு
புதன் 28, ஜூலை 2010 12:33:42 PM (IST)

கிறிஸ்தவ பாதிரியார் மீது புதுப்பெண் செக்ஸ் புகார்
புதன் 28, ஜூலை 2010 11:54:58 AM (IST)

கோவையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி தே.மு.தி.க ஆர்ப்பாட்டம்
புதன் 28, ஜூலை 2010 10:38:17 AM (IST)

மாணவியிடம் சில்மிஷம்: ஆசிரியருக்கு தர்மஅடி!
புதன் 28, ஜூலை 2010 10:17:59 AM (IST)

