» செய்திகள் » தமிழகம்

Share

கல்வி நிலையங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய தடை: தமிழக அரசு உத்தரவு!

புதன் 10, மார்ச் 2010 10:21:46 AM (IST)

பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அருகே 300 அடி தூரத்திற்குள் சிகரெட், பான்பராக் உள்ளிட்ட புகையிலைப்பொருட்கள் விற்க தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

இது தொட‌‌ர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலர் வி.கே.சுப்புராஜ் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கும் கல்லூரி கல்வி இயக்குனரகத்திற்கும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அ‌ந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில் இருந்து 300 அடி தூரம் வரை சிகரெட், பான்பராக் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்க தடை விதிக்கவேண்டும். இந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்து புகையிலை பொருட்கள் விற்காமல் இருப்பதை உறுதிபடுத்தவேண்டும் எ‌ன்று கடிதத்தில் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதைத்தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறை தமிழகத்தில் உள்ள அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரிகள், முதன்மை கல்வி அதிகாரிகள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப உள்ளனர்.

அதேப்போல அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப கல்லூரி கல்வி இயக்குனரகம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அண்ணாபல்கலைக்கழகம் புகையிலை பயன்படுத்தாத வளாகம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads