» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கம்: ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளி 11, ஏப்ரல் 2025 11:16:17 AM (IST)

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

பொன்முடி திருக்கோயிலூர் எம்எல்ஏவாக உள்ளார். அவர் மீது அண்மையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பின்னர் அவருக்கு மீண்டும் வனத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் அவர் பெண்களுக்கு எதிராகப் பேசிய பேச்சு அடங்கிய வீடியோ வைரலாகி சர்ச்சையானதால் அவரது கட்சிப் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே மகளிர் விடியல் பயணத் திட்டப் பயனாளர்களை ஓசி பேருந்து பயணம், மனு கொடுக்க வந்த பெண்ணிடம் சாதியை சுட்டிக் காட்டிப் பேசியது என்று அமைச்சர் பொன்முடி பேச்சால் எழுந்த சர்ச்சைகள் திமுக அரசுக்கு நெருக்கடியாக அமைந்தன.

கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவுபடுத்தும் விதத்தில் பேசியதாகத் தெரிகிறது. அந்தப் பேச்சு அடங்கிய வீடியோ நேற்று முதல் சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் சூழலில் பொன்முடி திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது அமைச்சர் பதவியும் பறிபோகுமா என்ற சலசலப்புகள் கட்சிக்குள் எழுந்துள்ளன.

இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழக துணைப் பொதுச் செயலாளர் க.பொன்முடி அவர் வகித்து வரும் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பதவி நீக்கத்துக்கான காரணத்தை அந்த அறிக்கையில் குறிப்பிடவில்லை.

 கனிமொழி கண்டனம்

திமுக எம்.பி. கனிமொழி இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளார். இது பொன்முடியின் அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய சறுக்கலாகப் பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

இதுApr 12, 2025 - 09:57:23 PM | Posted IP 162.1*****

இந்த தகுதியில்லாத திருட்டு தலைவர்களை தேர்ந்தெடுத்த ஓட்டு போட்ட துட்டு முட்டாள் மக்கள் தான் திருந்தனும்

தமிழன்Apr 11, 2025 - 07:10:31 PM | Posted IP 172.7*****

ஆடிய ஆட்டம் என்ன. பேசிய வார்த்தை என்ன. தேடிய செல்வம் என்ன.முற்றிலும் இந்த ஆளுக்கு பொருந்தும்.போக்ஸோ சட்டத்தில் கைது செய்யுங்கள். தி மு க. கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தூக்குங்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors

Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory